Saturday, August 4, 2007

சி.டி.ஸ்கேன் எடுத்தாலே மார்பகப் புற்றுநோய் வரும்?

ஜூலை 29 தேதிய தினமலர்(சென்னைப் பதிப்பு)ஐப் பாருங்கள்.இதய கோளாறுகளைக் கண்டறிவதற்காக 'சி.டி.ஸ்கேன் எடுத்தால் அதன் மூலம் இளம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும்அபாயம் உள்ளது'என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறதாம். இதயத்தில் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக சிடி ஸ்கேன் எடுக்கப்படுகிறது.ஆனால்20முதல்30வயதுள்ள பெண்களுக்கு இந்த ஸ்கேனை எடுத்தால் அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.வயதான பெண்களை விட இளம் பெண்களுக்குத் தான் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும்.
ஏனெனில் டாக்டர்கள் இதயக் கோளாறைக் கண்டறிய ஸ்கேன் செய்யும் போது மார்பகங்களை விட்டு விட்டு இதயத்தை மட்டுமே ஸ்கேன் செய்ய முடியாது.அதனால் ஸ்கேன் எடுக்கும்போது வெளியாகும் கதிர்வீச்சால் மார்பகத் திசுக்கள் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும்.அதை அடுத்து மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
அதனால் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும் 20 வயது பெண்கள் 143 பேர்களில்ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

Aruna Srinivasan said...

உங்கள் அனுபவங்களையும், அறிந்து கொள்ளும் விவரங்களையும் பகிர்ந்து கொள்ள முன் வந்ததுக்கு மிக்க நன்றி. சிகிச்சை ஆரம்பித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். விரைவில் குணமடைவீர்கள். நம்பிக்கையுடன் சிகிச்சைக்கு சென்று வாருங்கள். உதவி ஏதேனும் தேவைப்பட்டால் இங்கே தயங்காமல் பதியுங்கள். குரல் கொடுத்தால் எங்கிருந்தாகிலும் பதில் கிடைக்கும்.

அனுராதா said...

2003 செப்டம்பரில் ஆரம்பித்த சிகிச்சை பல கட்டங்களையும் தாண்டி இன்றும் தொடர்கிறது.மேலை நாடுகளில் இன்றைய தேதிக்குப் பயன்படுத்தப் படும் அதி நவீன மற்றும் விலை உயர்ந்த(ஒரு ஊசி ஒன்றரை இலட்சம் ரூபாயாம்!)மருந்து வரை மாதா மாதம் போடப்பட்டு வருகிறது.இந்த யுத்தத்தில் நான் தோற்பதாக இல்லை.தங்களது வருகைக்கு நன்றி.

Jayaprakash Sampath said...

//இந்த யுத்தத்தில் நான் தோற்பதாக இல்லை//

அது!!!!

மருந்து குணப்படுத்துமோ இல்லையோ... இந்த ஸ்பிரிட் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரட்டும்...

அனுராதா said...

நன்றி இகாரஸ் பிரகாஷ்.