Saturday, December 1, 2007

இந்த வார டிசம்பர் 5, 2007 ஆனந்த விகடனில் எனது "கேன்சருடன் ஒரு யுத்தம்" வலைபதிவு அறிமுகம்

இந்த வார டிசம்பர் 5, 2007 ஆனந்த விகடன் வார இதழில் விகடன் வரவேற்பறை பகுதியில் எனது இந்த வலைப்பதிவை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.இதன் வாயிலாக லட்சக்கணக்கான விகடன் வாசகர்களையும் தமிழ் நெஞ்சங்களையும் இவ்வலைப்பதிவு
சென்றடையும்.அனைவருக்கும் இந்த நோயைப்பற்றிய தாக்கத்தையும்
விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.ஆனந்த விகடனுக்கும்,அதன் ஆசிரியர் குழுவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி
.

..............................................................................................................................................................................

சென்ற இடுகையை என் கணவர் எழுதியிருந்தார்.சரியாகத்தான்
எழுதியிருக்கிறார்.

ரேடியேசனும் கீமோ மாத்திரையும் கொடுக்கப்பட்டு வருகிறது.உடல்
நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.நேற்று முதல் நானாகவே படுக்கையிலிருந்து எழுகிறேன்.நானாகவே உட்கார்கிறேன்.நானாகவே என் வலது கையினாலேயே சாப்பிடுகிறேன்.சிந்தனை தெளிவடைந்துள்ளது. நன்றாகப் பேசுகிறேன். காலையும் மாலையும் மருத்துவமனை வராண்டாவில் நீண்ட நேரம் யாருடைய உதவி இல்லாமலேயே நடக்கிறேன்.

இதோ இந்த இடுகையை நான் சொல்லச் சொல்ல என் கணவர் தட்டச்சு செய்கிறார்.

சனி,ஞாயிறு ஆகிய இரு நாட்களுக்கு ரேடியேசன் கிடையாது .கீமோ மாத்திரையும் கிடையாது. அடுத்து 3 ந் தேதி திங்கட்கிழமை முதல் 7 ந்தேதி வெள்ளிக்கிழமை வரை மீண்டும் ரேடியேசனும் கீமோ மாத்திரையும் கொடுக்கப்படுமாம்.அடுத்த என்ன சிகிச்சை என்பதை வெள்ளிக்கிழமை மாலை சொல்வதாக டாக்டர் தெரிவித்திருக்கிறாராம்.

அதுவரை காத்திருக்கிறேன்.

24 comments:

Baby Pavan said...

Aunty we are praying daily for you.

மதுரையம்பதி said...

அன்னை மீனாக்ஷி உங்களுக்கு நல்வாழ்வளிப்பாள்....
பிரார்த்தனைகளுடன்.

மெளலி.

புதுகைத் தென்றல் said...

anbu nenjangalin prarthanai,

andha kathirgama kandananin arul
ivaigalal thaangal seekirame gunamadaiveergal.

nan en reiki master itam solli ungalukkaga reiki seyya solgiren

கீதா சாம்பசிவம் said...

அனுராதா, இந்த யுத்தத்தில் நீங்கள் ஜெயிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பாச மலர் said...

கடந்த 2 வாரங்களாகத்தான் உங்களைப் பற்றி உங்கள் பதிவுகள் மூலம் அறிந்தேன்...உங்கள் உறுதி உங்களுக்குத் துணை நிற்கும்..மதுரை வரும்போது உங்களைச் சந்திக்கிறேன்..

cheena (சீனா) said...

அன்புச் சகோதரி அனு ராதா

மலை நாடான் பாடிய பாடல் அருமையாக உள்ளது. உண்மையை உணர்ச்சிகரமாக உணர்த்தி இருக்கிறார். ஆனந்டஹ் விகடனில் வலைப் பூ அறிமுகப்படுத்தியதின் விளைவாக உலகம் முழுவதும் உன் தன்னம்பிக்கையும் மன வலிமையும் எதிர்த்துப் போராடும் குணமும் அனைவருக்கும் அறிமுகமாகும்.

பாடல் கூறியது போல நீ 100 ஆண்டு வாழ வேண்டும். இந்த நோயினால் அவதிப்படும் அனைவருக்கும் உன் உதவி தேவைப் படுகிறது.

DJ said...

அனுராதா,
விரைவில் தெம்புடனும், உறுதியுடனும் வருவதற்கு என் அன்பு.

Anonymous said...

இத்தனை பேருடைய பிரார்த்தனையும் நிச்சயம் பலிக்கும். பலிக்க வேண்டும். உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் உறுதியான நெஞ்சிருக்கிறது. இறைவன் துணை நிற்பான்."எல்லவற்ரைஇயும் என்கிட்ட விட்டுடுங்க நான் பார்த்துக்கறேன்" என்றிருக்கிறார் என் குருஜி. இந்த பாரத்தையும் அவரிடம் சமர்ப்பிக்கிறேன்.

அப்பாவி இந்தியன் said...

அனுராதா அவர்களே, உங்களுடைய தன்னம்பிக்கையால் இந்த கொடிய கேன்சரை வெற்றி கொள்வீர்கள். அந்த சந்தோஷமான செய்தியையும் நான் விகடனில் படிப்பேன்.

நம்பிக்கையுடன்,

கார்த்திக்

ushie said...

சகோதரி,
நீங்கள் பூரண நலம் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உடல்
நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.நேற்று முதல் நானாகவே படுக்கையிலிருந்து எழுகிறேன்.நானாகவே உட்கார்கிறேன்.நானாகவே என் வலது கையினாலேயே சாப்பிடுகிறேன்.சிந்தனை தெளிவடைந்துள்ளது//

இந்த தன்னம்பிக்கையே பாதி குணம் அம்மா! உங்களுக்கு என்றும் என் பிரார்த்தனைகள்!

விகடனில் ஜொலிக்கும் உங்களையும், உறுதுணைக் கணவரையும் மனமார வாழ்த்துகிறேன்!

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்
(மனம் தளராமல் முயற்சி செய்பவர் விதியையும் புறங்காணச் செய்வர்)

Anonymous said...

நலம்பெறப் பிரார்த்திக்கின்றேன்.

Kannan said...

நலம்பெறப் பிரார்த்திக்கின்றேன்

Premlatha said...

ai,

It is very good to hear from you that u are feeling better and doing your work by yourself. Have will power. That is the only medicine which will keep you in good health. Follow the instructions carefully give by your Doctor and have chemo as scheduled though it is very painful(bcoz i know the side effects and difficulties while having chemo).

Best of luck
Premlatha@yahoo.com

Nandhakumar.Bala said...

After read this blog, i don't have any words to say, all i can pray the almighty to give enough power for the family and anuratha aunty to face the future.

My sincere prayers to get well soon...my eyes are filled with tears.......and don't know what to say...i am in search of your contact number so that i can speak to your few words....if time permits and you are willing to talk to me, pl pl pl forward me..

Nandhakumar.B
( nand1972@gmail.com )

mvm said...

Madam

I have been reading your blog since beginning. I pray to God that you recover from dreadful disease very soon. You have shown tremendous courage all through the treatment and I can understand how difficult it is to go through because my husband is a liver cirrhosis patient and he is under treatment for the past two years. When I get upset, I think of you and your husband who are struggling against the disease. Mere words cannot bring any solace but prayers can. All my well wishers have been praying for us and nowadays my prayers include both of you.

Both of you have been facing the situation with lot of patience and courage and to put all your experience on record requires greater courage. I sincerely wish for your speedy recovery.

ரசிகன் said...

வருந்துகிறேன் அக்கா..

நீங்கள் கூடிய விரைவில் குணமடைந்து முன்னைவிட புத்துணர்ச்சியுடன் எங்களோடு இணையத்தில் வலம் வர வாழ்த்துகிறேன்..

அன்புடன் நண்பன்..

Puthiyawan said...

ஆனந்தவிகடனைத் தற்செயலாகப் பார்வையிட்டபோது உங்கள் வலைப்பதிவினைக் காணக்கிடைத்தது. துன்பங்கள் வந்தபோதிலும் மற்றயவர்கள் அத்துன்பங்களைப் பாடங்களாகக் கொண்டு மகிழ்வாக வாழ வழிசெய்ய முயலும் உங்கள் அனுபவப் பதிவிற்கு வாழ்த்துக்கள்.

உங்களிற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவிலிருந்து மீண்டுவர எம்மன்பினையும் பரிமாறிக்கொள்கிறோம்....

நிலா said...

ஆண்ட்டி கவலையே படாதீர்கள். இதையெல்லாம் ப்பூவென்று ஊதி ஜாம்ஜாமென்று நலமாகி வரபோறீங்க பாருங்க

தி. ரா. ச.(T.R.C.) said...

@எதிர்த்துபோரடும் வலிமையும்,மனோதிடமும் முடிவில் வெற்றியும் கிடைக்க என் பிரார்த்தனைகள்

வடுவூர் குமார் said...

Get Well Soon.

Anonymous said...

We all are praying for you everyday. YOU WILL BEAT THIS CANCER and live long life. GOD will help you and your family. I am always thinking of you.

Rumya

அனுராதா said...

அனைவருக்கும் நன்றி.

Anonymous said...

megan fox naked , paris hilton sex tape
There’s a story that’s been out for a couple of weeks about a kid that tried to give Megan Fox a rose at the London Transformers premiere and she ignored him. This is the picture that was captured and the kid’s face really tells the story. That photographer needs a raise megan fox naked video
megan fox naked photos
Onlookers claimed to watch the proposal go down, complete with a jumping up-and-down Megan Fox (for that mental image, you’re welcome) and Fox subsequently dropping the two-carat ring somewhere into the sand. megan fox fully naked
megan fox naked
This foxy blue-eyed brunette has got her fucking technique perfectly developed after years of having sex. Her favorite positions are on top and reverse cowgirl. I included some hardcore photos of Megan Fox in this post. megan fox naked