சென்ற பதிவுடன் எனது அனுபவம் முடிந்தது என்று நினைத்தேன்.ஆனால் முடியவில்லையே!கடந்த ஒரு வாரமாக எனது வலது கை வீங்கிக்கொண்டே வருகிறது.வலியும் இருக்கிறது.இங்குள்ள பொது மருத்துவரைப் போய்ப் பார்த்தோம்.எனது ரிக்கார்டுகளைப் பார்த்து திகைத்துப் போனார்.முழங்கையில் ஏதோ நீர் தேங்கி இன்ஃபெக்சன் ஆகியிருக்கலாம் என்றும் உடனே மருத்துவமனையில் அட்மிட் ஆகி இரண்டு மூன்று நாட்கள் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து பார்த்தால் தான் என்னவென்று தெரியும் என்றும் கூறிவிட்டார்.சென்னையிலுள்ள எனது டாக்டருக்குப் போன் போட்டு விபரம் சொன்னோம்.அவர் ஓரிரு மாத்திரைகளைச் சொல்லி வாங்கிச் சாப்பிடும்படி சொன்னார்.இங்குள்ள பொது மருத்துவரை மீண்டும் சந்தித்து விபரம் சொன்னோம்.அதற்குச் சமமான மாத்திரைகள் சிலவற்றைக் கொடுத்துள்ளார்.மூன்று நாட்களாக அவைகளைச் சாப்பிட்டு வருகிறேன். வலியும் வீக்கமும் கொஞ்சம் குறைந்துள்ளது.சிங்கப்பூரிலேயே இருந்து பார்க்கலாம் என்றால் செலவு அபரிமிதமாக இருக்கும் என்று டாக்டரே சொல்லிவிட்டார்.எனவே இரண்டு மூன்று நாட்களில் சென்னைக்குத் திரும்பிவிடுவது என்று முடிவு செய்துள்ளோம்.
அடுத்த முக்கியமான விஷயம் என்னால் முன்னால் பேசுவது மாதிரி இப்போது பேச முடியவில்லை.வாய் வரவில்லை.வீட்டில் உள்ள அனைவரும் இந்த மாற்றத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.என் கணவரோ,பையனோ மகளோ ஏதாவது கேட்டால் என்னால் ஒழுங்காகப் பதில் சொல்லமுடியவில்லை. "வெளியே போகலாமா?"என்று கேட்டால் "வெளியே"என்று மட்டும் தான் வாய் விட்டு சொல்லமுடிகிறது.அடுத்த வார்த்தை வரவில்லை.என்னை எப்படியாவது முன் போல பேசவைக்கவேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.என்னால் தான் பேச முடியவில்லை. பேச்சு தொடர்ந்து வரமாட்டேன் என்கிறது.
தெளிவாக சிந்திக்க முடியவில்லை.ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.என் கணவர் கேட்டதற்கு நான் சொன்ன அதிகபட்சமான பதில் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்."என்று சொல்கிறேன்.அதாவது என்னைச் சுற்றியுள்ள அனைவரின் நடவடிக்கைகளையும் பேச்சுகளையும் நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.
இவைகளைப் பதிவுகளாகப் பதியும்படி பலமுறை என் கணவரிடம் வற்புறுத்தியபிறகே இப்போது என் கணவர் லேப் டாப்பில் டைப் செய்து படித்துக் காண்பித்தார்.
இந்த யுத்தத்தில் நான் தோற்றுவிடுவேனோ என்ற பயம் வந்துவிட்டது.இனியும் சிகிச்சை மருந்து எதுவும் வேண்டாம் என்று தெரிவித்துக் கொண்டே இருக்கிறேன்.என்ன செய்வது என்று தெரியவில்லை.நான் பேசவில்லை என்றாலும் நான் பேசும் ஓரிரு வார்த்தைகளைக் கொண்டும் நான் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கொண்டும் நான் எது எது பதியவேண்டும் என்று சொல்கிறேனோ அவைகளையெல்லாம் கட்டாயமாகப் பதிந்து எனக்குப் படித்துக் காண்பிக்கவேண்டும் என்று என் கணவரிடம் சொல்லியிருக்கிறேன்.யாருடைய அனுதாபங்களையும் பெறுவதற்காக இதைச் சொல்லவில்லை.இந்த வலைப் பதிவை ஆரம்பிக்கும்போதே என் கணவரிடம் தெரிவித்திருக்கிறேன்.நான் இறக்கும்வரை என் அனுபவங்களைத் தொடர்ந்து பதியவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.என் கணவர் சரி என்று கூறியிருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
61 comments:
அனுராதா!இதை நீங்கள் அனுபவம் பகுதிக்குள் அல்லவா போட்டிருக்க வேண்டும்...? நான்தான் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறேனா என்று தெரியவில்லை. இத்தகைய உபாதையை அனுபவித்துக்கொண்டிருப்பது நீங்களா...? அவ்வாறெனில்... என்ன சொல்வது... இந்நேரம் அனுதாபம் என்று சொல்வது பொருந்தாது. மனவுறுதியோடு இருங்கள் தோழி!
சரி எல்லாம் ஓரளவு சரியாகி தேறிடிவீங்கன்னு பாத்தா..இப்படி இன்னொரு ப்ரச்சனையா?? மனதுக்கு வேதனையா இருக்குங்க...உங்களுக்கு சீக்கரமா குணமாகணும்னு கடவுளை ப்ரார்திக்கரேன்....இவ்வளவு நாள் இருந்த மனவுறுதியோடு இதையும் எதிர்கொள்ளுங்க......இந்த போராட்டதில் உறுதுணையா இருக்கும் உங்க கணவர், குழந்தைகளுக்கும் பாராட்டுக்கள்.
நீங்க தோற்க மாட்டீங்க ஆண்ட்டி. குட்டிபாப்பா நான் சொல்கிறேன். நான் பெரிய பெண்ணாகி நானே எழுதுவதையெல்லாம் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
ஆண்டவன் அருளால் உங்களுக்கு சீக்கரமா குணமாகும்.
கடவுளை ப்ரார்திக்கரேன்....
அன்புத்தோழி அனுராதா
என்ன எழுதுவது - தெரியவில்லை.
ஒவ்வொரு பதிவையும் படித்துப் பின்னூட்டம் இட்டவன் நான்.
நிலைமை கை மீறிப் போகிறது.
ஆண்டவன் மட்டுமே அருள் புரிய முடியும்.
வலைப் பதிவர்கள் அனைவருமே தங்களுக்காகப் பிரார்த்திக்கிறார்கள்.
மன வலிமையை விட்டு விடாதீர்கள்.
தங்களின் அருமைக் கணவர், ஆசை மகன், மற்றும் மகள் - மற்ற உறவினர் அனைவருக்கும் மன வலிமையையும், நிகழ்வுகளைச் சந்திக்கும் துணிவையும், திறமையையும் ஆண்டவன் அருள் வானாக.
நீங்கள் விரைவில் குணமடைய ப்ரார்த்திக்கிறேன் அம்மா..
மனம் தளர்ந்து போகாதீர்கள்.
மலரும் நினைவுகள் இரண்டுடன் நிறுத்திவிட்டீர்களே.தைரியத்தோடு மலரும் நினைவுகளை தொடருங்கள். அவை உங்களை உற்சாகப்படுத்தம்.
உங்களுக்காக குழந்தைகள் கடவுளை வேண்டுகிறோம் இங்கே. இதை மாமா நீங்கள் ஆண்ட்டிக்கு படித்துக் காட்டுங்கள். அவங்களுக்கு இன்னும் மன தைரியம் வரும்
நீங்கள் விரைவில் குணமடைய ப்ரார்த்திக்கிறேன் அம்மா..
உங்களுக்கு பூரணமாக குணமாகி வந்து அதை சீக்கிரமே பதிவு போட்டு சொல்வீங்க பாருங்களேன். நாங்க இருக்கோம் உங்க கூட.
(-:
அம்மா
கவலைப் படாதீர்கள் தன்னம்பிக்கையைக் கைவிடாதீர்கள். உங்கள் தைரியத்தைக் கண்டு வியக்கிறேன்.
(வெளியிட வேண்டாம்)
நீங்கள் சிங்கப்புரில் இருப்பதால் உங்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன். பார்க்க வரலாமா? என் தொலைப்பேசி எண் 81808716
உங்கள் மனத்துணிவை வியந்தவளென்ற முறையில் சொல்கிறேன்: எல்லோர் பிரார்த்தனையும் உங்கள் பக்கம். வைரம் எத்தனை சோதனைகளைத் தாண்டுகிறது? கடவுளின் செல்லக் குழந்தைகளில் ஒருவர் நீங்கள், இப்போது ஏற்பட்டிருக்கும் துயர்களைத் தாண்டி எளிதில் வர வேண்டிக் கொள்கிறேன்...
தயவு செய்து பேச்சு வரவில்லை என்று தொடர்ந்து பேசவைக்கிறார்கள் என்பது தங்களுக்கு மேலும் அழுத்தத்தை தர வாய்ப்புள்ளதால் கொஞ்சம் இயல்பாக அமைதியாக இருக்க முயற்சிக்கவும். மனதில் தோன்றும் பய உணர்வை மறக்க முடியாது... ஆனால்எதிரியைகொல்ல பாயும் சிப்பாய் போல் அநத பயத்தை தங்கள் போராட்ட மனதுடன் துரத்தியடியுங்கள். இந்தப் போராட்டங்கள் தான் வாழ்க்கை! பலருக்கு பல்வேறு வடிவங்களில். மனதின் வலிமை அசாதாரமானது. வாழ்த்துகிறேன் தோழி! உன் தைரியம் வாழ்க!
அனுராதா!
உங்கள் பதிவுகளை தொடர்ந்து செய்யுங்கள். நம்பிக்கையை வலுப்படுத்துங்கள். வாழ்வீர்கள்.
தன் உடல் உபாதை அனுபவங்களை மறப்பதற்காக, வைத்தியர்களும் நண்பர்களும், அவனுக்கு ஆர்வமான ஒளிப்பதிவுத்துறை மூலம் அவனது அனுபவங்களைப் படம்பிடிக்க வைத்து, அதைத்தொகுத்து அருமையான ஒரு சினிமாவை சுவிற்சர்லாந்தில் படைத்திருக்கிறார்களென சென்ற வாரத்தில்தான் அறிந்தேன். அந்தப் படத்தைப் பார்க்க அவன் தற்போது இல்லை. ஆனால் அது அவனது சாதனைமுயற்சியாகவும், இலட்சிமுயற்சியாகவும், இன்று பாராட்டப்படுகிறது.
நலமுறப்பிரார்த்திக்கின்றோம்.
அன்புள்ள தோழிக்கு,
எந்த கவலையும் வேண்டாம். தங்கள் உறுதி பற்றி எனக்குத் தெரியும். தாங்கள் மறுபடியும் புத்துணர்ச்சியுடன் திரும்ப வாழ்த்துக்கள்.
நீங்கள் விரைவில் குணமடைய ப்ரார்த்திக்கிறேன்.
நான் வலைபதிபவனல்ல, வாசகன். ஓய்வு பெற்ற தமிழாசான். ஓசை செல்லாவின் இன்றைய பதிவின் மூலம் தங்களின் இந்த வலைப்பதிவு முயற்சி பற்றி அறிந்தேன். பல பதிவுகளையும் முதல்முறையாகப் படித்தேன். உளப்பூர்வமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நேர்மையாகவும் எழுதப்பட்ட தமிழ் வலைப்பூக்களில் இதிவும் ஒன்று என்று அனைவரும் ஒத்துக்கொள்வார்கள் என்றே எண்ணுகிறேன். தங்களுக்கு ஆதரவாக இருக்கும் கணவர் மகன் மகள்கள் வலைபதியும் மருத்துவர்கள் (டெல்பின்,எஸ்.கே) மற்றும் பதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை இந்த 75 அகவை நிரம்பிய முதியவன் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களைப் போன்ற ஊழையும் உப்பக்கம் காண்பவர்களால் தான் மருத்துவம் முதல் மானுடம் வரை மனித இனம் முன்னேறிக்கொன்டுள்ளது. எனக்கென்னவோ இந்த முயற்சியின் மூலமே நீங்கள் மரணத்தை வென்றுவிட்டீர்கள், வருங்காலத்திலும் உங்கள் புகழ் நிலைக்கும், பல தாய்மார்கள் நீங்கள் உருவாக்கியிருக்கும் இந்த விழிப்புணர்வால் காப்பாற்றப்படுவார்கள். வேறென்ன வேண்டும் மகளே உனக்கு. மேலும் தைரியமாகப் போராடு சாதனை பெண்ணே.
புலவர் நா புகழேந்தி
நீங்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
அனுராதா,
விரைவில் நலமடைய அன்பும் பிரார்த்தனைகளும்.
தோழர் அனுராதா அவர்களுக்கு வணக்கம் இன்று ஓசை செல்லாவின் பதிவை கண்ட பிறகு தான் தெரிந்தது கேன்சருடன் ஒரு யுத்தம் என்ற வலைப்பூவில் உங்களுடைய வலிகளை பதிவுகளாக்கி கொண்டு வருவது தெரிந்தது. உங்களுடன் பேச விரும்புகின்றேன்.
periyar71@yahoo.com
நீங்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்
அனுராதா அம்மா நீச்சயம் நீங்கள் சுகமடைந்து இன்னும் பலகாலம் வலை பதிவீர்கள் இது சத்தியம் மட்டுமல்ல சாத்தியமும் கூட.எப்படித் தெரியுமா?
உங்கள் மன உறுதி கண்டு மிரண்டுபோனானே அந்தக் கடவுள் இப்பவும் நீங்கள்தான் ஜெயிப்பீர்கள்.
அப்பா[அனும்மாவின் துணைவாருக்கு]
முடிந்தால் அம்மாவை விரூம்பும் நபர்களோடு சாட் செய்ய எழுதுவது நீங்களானாலும்]அல்லதுவாய்ஸ் சேட் மூலம் எங்கள் அன்பைத் தெரிவிக்க ஏதுவாக அவர்கள் சாட் ஐடிதரக்கூடாதா?
ஏதும் சிரமமென்றால் வேண்டாம்.
அன்பான உங்களோடு அம்மா இன்னும் நீண்டகாலம் வாழ்வார்கள்.
சகோதரி,
சமீபத்தில்தான் உங்கள் பதிவுகளை படித்தேன்.இவ்வளவு துன்பங்களையும் மன உறுதியடன் கடந்து வந்து என்னைப் போன்ற நடுவயது பெண்களுக்கு மன உறுதியை அளித்துள்ளீர்கள். எனக்கு நன்கு தெரிந்த ஐம்பது வயது பெண்மணிக்கு சில வருடங்களுக்கு முன் மார்பக புற்று நோய் வந்தபோது அவரின் ஒரே மகன், மருமகள் தொட பயந்து ஒரு சாரிட்டி ஹோமில் சேர்த்து விட்டனர்.(அவர் அங்கே மனமுடைந்து இற்ந்தார்). உங்கள் எழுத்துக்கள் அவரைப் போன்றவர்களின் உறவினர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். அன்பான துணை, நல்ல குழந்தைகள், மனவுறுதி எல்லாம் அமைந்த உங்களை இறைவன் கைவிட மாட்டான். நீங்கள் நலம் பெற்று பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்.
அனுராதா,
நீங்கள் விரைவில் குணமாக என்னுடைய பிரார்த்தனைகள்.
-மதி
அம்மா,
மனம் தளர்ந்து போகாதீர்கள்.
கட்டாயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்..
சிகிச்சையைத் தொடருங்கள்....
அனுராதா,
நீங்கள் விரைவில் குணமாக என்னுடைய பிரார்த்தனைகள்.
உங்களுடைய தைரியமான குணமும், அடுத்தவருக்கு உதவ நினைக்கும் பாங்கும் எனக்கு மிகவும் பிடித்த விதயங்கள். உங்களுடைய இந்த இடுகைகளை எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
உங்களுடைய மன உறுதி உங்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் பன்னடைவில் இருந்து மீட்கும். I'm very sure.
-மதி
உங்களுக்கு உடல்நலம் பெற வாழ்த்துகிறேன்..
வாழ்கவளமுடன்.
எல்லார் ப்ரார்த்தனையும் உங்களுக்கு உறுதுணையாகட்டும்..
( இந்த பதிவின் அந்த நீல நிறத்தை மாற்றமுடிந்தால்
மாற்றுங்கள்..)
கவலை வேண்டாம் சகோதரி.
எங்களின் பிரார்த்தனை வீண் போகாது.
எல்லாம்வல்ல இறைவன் இத்துன்பத்தில் இருந்து உங்களை மீட்பார்.
The Almighty will give you standing power to face any situation.
நீங்கள் விரைவில் குணமாக என்னுடைய பிரார்த்தனைகள்.
மனதிலும் உடலிலும் உறுதி தளராமல் இருக்கவும், விரைவில் குணமடையவும் என் பிரார்த்தனைகள்.
தோழி, விரைவில் குணமடைவீர்கள்! எங்கள் பிராத்தனை உங்களுடன்!
உங்களுக்கு எங்களின் அன்பும் பிரார்த்தனைகளும்..
GET WELL SOON!
GET WELL SOON!
நீங்கள் மறுபடியும் புத்துணர்ச்சியுடன் திரும்ப வாழ்த்துக்கள்.நீங்கள் விரைவில் குணமடைய ப்ரார்த்திக்கிறேன்.
உங்கள் மன உறுதி உங்களை சுகமடைய வைக்கும் என நான் நம்புகிறேன்
நீங்கள் விரைவில் குணமடைய வேண்டுமென மனதார விரும்புகிறேன்!,எண்ணங்களின் வலிமையால் எல்லாம் நன்றாக நடந்திருக்கிறது.நல்லதே நடக்கும்,நம்புங்கள்!
I will pray for your speedy
recovery.
சகோதரி!
தன்னம்பிக்கையை இழக்கவேண்டாம், மருத்துவ ஆலோசனையைத் தொடரவும்.
எல்லா பிரச்னைகளிலுருந்தும் மீண்டு வந்து நலமாக பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
நீங்கள் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
- வேல் -
குறைகள் மறைந்து போய் மருத்துவ அற்புதம் என்கிறார்களே அதே போல் நீங்கள் நலம் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் - நாகூர் இஸ்மாயில்
பல நேரங்களில் தங்கள் பதிவினை பற்றி என் தந்தையிடம் (அவரும் கான்ஸரால் தவிக்கிறார்) கூறியிருக்கிறேன்..கடவுள் தங்களுக்கு பூரண நலம் தருவார், தளராத நம்பிக்கையுடன் இருங்கள்.
I am a smoker. on reading your articles i have understood the effects of cancer. today i halved my intake cause it may lead me to Lung cancer. Though everyone said that for the first time, after reading your blog posts the message reached my consciousness for the first time. thanks. Get well soon. I will pray for you today.
Prem Kumar
Calicut
நீங்கள் விரைவில் குணமடைய ப்ரார்த்திக்கிறேன்.
விரைவில்பூரண குணமடைய என்னுடைய பிராத்தனைகள். எதை இழந்தாலும் உங்கள் மன உறுதியை இழக்காதீர்கள். உங்களுக்காக பிராத்தித்த உள்ளங்களின் அன்பு உங்களுக்கு இந்த தருணத்தில் உறுதுணையாக இருக்கும்.
Namaskar !!
My wife Ranjan Shah is a breast cancer patient from 1999. She has refused IV Chemo and Radiation. Her cancer returned in May 2003 and continue to refuse IV Chemo. She is enjoying a good quality of life. At present she is on ORAL Chemo with a minimum side effects. She takes lots of Natural Herbs. Good luck !! If I can be any help please let me know. 305 684 4526 and my email is shah1@bellsouth.net. Mahendra Shah
Namaskar !!
My wife Ranjan Shah is a breast cancer patient from 1999. She has refused IV Chemo and Radiation. Her cancer returned in May 2003 and continue to refuse IV Chemo. She is enjoying a good quality of life. At present she is on ORAL Chemo with a minimum side effects. She takes lots of Natural Herbs. Good luck !! If I can be any help please let me know. 305 684 4526 and my email is shah1@bellsouth.net. Mahendra Shah
Namaskar !!
My wife Ranjan Shah is a breast cancer patient from 1999. She has refused IV Chemo and Radiation. Her cancer returned in May 2003 and continue to refuse IV Chemo. She is enjoying a good quality of life. At present she is on ORAL Chemo with a minimum side effects. She takes lots of Natural Herbs. Good luck !! If I can be any help please let me know. 305 684 4526 and my email is shah1@bellsouth.net. Mahendra Shah
Namaskar !!
My wife Ranjan Shah is a breast cancer patient from 1999. She has refused IV Chemo and Radiation. Her cancer returned in May 2003 and continue to refuse IV Chemo. She is enjoying a good quality of life. At present she is on ORAL Chemo with a minimum side effects. She takes lots of Natural Herbs. Good luck !! If I can be any help please let me know. 305 684 4526 and my email is shah1@bellsouth.net. Mahendra Shah
Namaskar !!
My wife Ranjan Shah is a breast cancer patient from 1999. She has refused IV Chemo and Radiation. Her cancer returned in May 2003 and continue to refuse IV Chemo. She is enjoying a good quality of life. At present she is on ORAL Chemo with a minimum side effects. She takes lots of Natural Herbs. Good luck !! If I can be any help please let me know. 305 684 4526 and my email is shah1@bellsouth.net. Mahendra Shah
தாங்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்!
அன்புத் தாயே!
என் அம்மாவாகவே தங்களைப் பார்க்கிறேன்..
தாங்கள் செய்யும் இந்த பணி அளப்பரியது....வெறும் கற்பனைகளால் சுவாரஸ்யம் சேர்க்கும் வரிகள் அல்ல உங்கள் வரிகள்,உயிரின் வலியை உணர்த்தி பல உயிர்களின் அளவை நீட்டிக்கப் போகும் உன்னத எழுத்துக்கள் இவை....எந்த சுயத்தையும் விட இந்த சுயம் மிகப் பெரிதே,தங்கள் கவிதையும்,தினசரி உபாதைகளும் என்னை இறுக்கமாக்கியது..தாயே நீங்கள் இன்னும் இன்னும் பல்லாண்டு காலம் வாழவேண்டும்..இதோ கோடனகோடி மகன்களில் நானும் ஒருவனாய் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்....தங்களின் இப்பதிவு நிச்சயம் புற்றுநோய் குறித்த ஓர் அழியாத சரித்திரமாய் என்றும் உயிர்பெற்று நிலைத்திருக்கும்...அம்மா நான் வலைப் பதிவிற்குப் புதியவன் ...தமிழ் சினிமாவில் கதைநாயகனாக்கப்பட்டு,,விளம்பரப் படுத்தப்பட்டு,விரக்தியாகி,தற்போது குறும்படங்களிலும்,மேடை நாடகத்திலும் நடித்து வரும் ஓர் விவசாயி மகன்...நண்பரின் கணிணி சிலநேரங்களில் எனக்கு கிடைக்கும் பொழுது பதிவு போடுகிறேன்...தவறுகள் இருந்தால் சுட்டுங்கள்...தங்களைப் போன்றோரின் ஆசிர்வாதம் எனக்கு மிக அவசியம்....தங்களுக்காகவும்,தங்கள் குடும்பத்திற்காகவும் இறைவனை வேண்டுகிறேன்...தங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியபடுத்தவும்...
இபடிக்கு அன்பு மகன்
சண் சிவா
www.aaraamthinai.blogspot.com
shiva.urs@gmail.com
தனித்தனியாகப் பெயர் எழுதி நன்றி சொல்வது முடியவில்லை.ஊர் கூடித் தேர் இழுத்திருக்கிறீர்கள்.இதோ நிலைக்கு வந்துவிட்டேன்.அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக இன்று ஒரு இடுகை பதிந்துள்ளேன்.அடுத்த வாரத்திலிருந்து உங்கள் அனைவரின் பதிவுகளிலும் பின்னூட்ட வலம் வருகிறேன்.அது இன்னும் கொஞ்சம் புத்துணர்ச்சியைத் தரும் என்று நினைக்கிறேன்.
சகோதரி அனுராதா, மனம் நிறைந்திருக்கிறது. தேர் நிலைக்கு வந்ததற்கு. பொதுவாக கூட்டுப் பிரார்த்தனை என்பது மிகுந்த பலனைத் தரும். சக வலைப் பதிவர்கள் அனைவருக்கும் சகோதரி சார்பில் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I salute you my dear Anuratha. I read about your valient fight against cancer in globalvoicesonline.org. My prayers are with you.
Regards,
Tanya
I wish you will recover from this.May god be with you during this difficult period
anuradha,
i am happy you have recovered. keep thinking positively.i know it is hard and difficult to be positive and it is easy said than done. try to keep your arm raised if that's ok. we all are with you
கடவுள் கைவிட மாட்டார் சகோதரி, பலநாட்கள் கழிச்சு, நண்பர் ஒருவரின் பதிவின் மூலம் தங்கள் பிரச்னை அதிகரித்து இருப்பதை அறிந்து வருத்தமாய் உள்ளது. தங்கள் மனோதைரியம் இதையும் வெல்லும், கவலை வேண்டாம்.
Post a Comment