Wednesday, November 14, 2007

பிரார்த்தனைகள் பலிக்கின்றன.

பின்னூட்டங்களிட்ட அன்பு நெஞ்சங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.நான்கு நாட்களாக தினமும் வருகிற பின்னூட்டங்களை எனக்கு மீண்டும் மீண்டும் படித்துக் காண்பித்துக் கொண்டிருக்கிறார் என் கணவர்.
உங்களில் ஒருவரையேனும் நான் முன்னே பின்னே பார்த்ததுகூட கிடையாது.ஆனால் என் உடல்நிலை தேறவேண்டும் என்பதற்காக இவ்வளவு பேர்கள் கவலையுடன் விசாரித்து எழுதியிருக்கிறீர்கள்.பிரார்த்தனை செய்திருக்கிறீர்கள்.இதில் குழந்தைகளும் சேர்ந்து பிரார்த்தனை செய்திருக்கிறீர்கள்.ஒவ்வொரு பின்னூட்டத்தையும் யார் எழுதினார்,அவரது வலைப் பதிவு என்ன, அதன் சிறப்பு என்ன என்பதைப் பற்றி என் கணவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.எனது நெஞ்சம் நெகிழ்கின்றது.
நான் மிகவும் கொடுத்து வைத்தவள்.சொந்த பந்தங்களைத் தாண்டி இவ்வளவு வலைப்பதிவர்கள் தோழர் தோழிகளாகவும்,
உறவினர்களாகவும் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு எழுதியிருக்கிறீர்கள்.சிலர் என்னைத் தாயாகவே பாவித்து எழுதியிருக்கிறீர்கள்.

உங்கள் அனைவரின் பிரார்த்தனை வீண் போகாது என்றே நம்புகிறேன்.பிரார்த்தனைகள் கண்டிப்பாகப் பலிக்கும் என்பதற்கு நான் தேறி வருவதே அத்தாட்சி.

என் கணவர் அடிக்கடி ஒரு பொன்மொழி சொல்வார்.''நீ பத்து தடவை கீழே விழுந்ததைப் பற்றி இந்த உலகம் பார்ப்பதில்லை.பத்தாவது தடவையும் நீ எழுந்து நின்றாயா என்பதைத்தான் பார்க்கிறது."என்று சொல்வார்.

இதோ நான் எழுந்து நிற்பேன்.பழையபடி நன்றாகப் பேசும் வல்லமை பெறுவேன். உங்கள் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் எனக்கு முன் எப்போதும் இல்லாத மனவலிமை தந்திருக்கிறது.


இன்று தான் கொஞ்சம் உடல் நிலை தேறியிருக்கிறது.கை வீக்கம் கொஞ்சம் குறைந்து இருக்கிறது.பேச வருகிறது. சிந்தனை தெளிவாகிறது.ஆனால் இன்னும் முன்னேற வேண்டும்.

இவ்வளவு நல்ல உள்ளங்கள் இருக்கும்போது எனக்கு புத்துணர்ச்சி உண்டாகிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.இதைக் கொடுத்தது நீங்கள் தான். நீங்கள் தான்.இதற்காக வெறுமனே நன்றி மட்டும் சொல்லி அந்த வார்த்தையை அவமானப்படுத்த விரும்பவில்லை.மீண்டும் பழைய அனுராதாவாக மாறி புது தெம்புடன் மனவலிமையோடு வலம் வருவதுதானே நான் செய்யும் கைம்மாறு?

இந்தியா சென்றதும் மீண்டும் டாக்டரைப் பார்த்து சிகிச்சை தொடர சம்மதம் தெரிவித்துவிட்டேன்.நாளை மறுநாள் சனிக்கிழமை(18.11.2007)ந்தேதி இரவு இந்தியன் ஏர்லைன்ஸ் மூலம் சென்னை திரும்புகிறேன்.

எனது மெயில் ஐடி anurathass@hotmail.com
இன்னொன்று anurathass@gmail.com
என் கணவரின் மெயில் ஐடி sks_anu@hotmail.com
செல்பேசி +91 98404 56066

31 comments:

Sridhar V said...

உங்கள் பிரயாணம் நல்லபடியாக அமைந்து நீங்கள் நல்ல முறையில் தேறி இன்னும் பல்லாண்டுகள் சுகமாக வாழ எல்லாம் வல்ல அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.

வாழ்க்கையில் சின்னஞ் சிறு தடங்கலுக்கெல்லாம் அச்சப்பட்டு தடுமாறி நிற்கும் என் போன்றவர்களுக்கு உங்கள் (மற்றும் உங்கள் கணவரின்) எழுத்து பெரும் பலத்தை தருகிறது. நீங்கள் (இருவரும்) தொடர்ந்து எழுத வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியத்தின் முன்னேற்றத்தை தொடர்ந்து பதியுங்கள்.

ILA (a) இளா said...

உங்கள் பயணம் சிறக்கவும், உங்கள் உடல் நிலை மேலும் முன்னேறவும் ஆண்டவனை பிராத்தித்திக்கிறேன்

Baby Pavan said...

அத்தை நீங்கள் நலமடைய குட்டீஸ் நாங்கள் தினமும் கடவுளை பிராத்திக்கிரோம்.

nagoreismail said...

இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த நம்பிக்கையை விட்டு விட வேண்டாம், இன்னமும் நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள், உங்களுக்கு குணமாகி விட்டால் எப்படி இருப்பீர்களோ அந்த வாழ்க்கையை கற்பனை செய்யுங்கள், தொலைபேசுகிறேன், உங்களுடைய ஹாட் மெயில் ஐடியையும் உங்கள் கணவருடையதையும் எனது எம்.எஸ்.என் இல் இணைத்துள்ளேன், நல்ல படியாக நீடுழி வாழ எனது கண்ணீர் பிரார்த்தனைகள் - நாகூர் இஸ்மாயில்

கோவி.கண்ணன் said...

அனு அம்மா, விரைவில் முழுகுணமடைய வேண்டி வாழ்த்துகிறேன்.

கோபிநாத் said...

உங்களிடம் இருந்து நாங்கள் தான் அம்மா மனவலிமை கற்றுக் கொண்டுயிருக்கிறோம்.

விரைவில் முழு குணமடைய பிராத்திக்கிறேன்.

நிலா said...

உங்கள் உடல் முன்னேற்றம் எங்களுக்கு அவ்வளவு மன மகிழ்ச்சியை தருகிறது ஆண்ட்டி.

துளசி கோபால் said...

Good on you Anu.

Wish you all the BEST.

Anbudan,
Tulsi Gopal

Anonymous said...

Amma
All the best, Take care and keep on writing

Unknown said...

உங்கள் துணிவால் பலரும் பாடம் கற்றிருக்கிறோம்! நீங்கள் நலமடைந்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி.
//nagoreismail said...
இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த நம்பிக்கையை விட்டு விட வேண்டாம், இன்னமும் நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள், உங்களுக்கு குணமாகி விட்டால் எப்படி இருப்பீர்களோ அந்த வாழ்க்கையை கற்பனை செய்யுங்கள்//
ரிப்பீட்டேய்! நோய்க்கு நீங்கள் திருப்பிக் கொடுக்கும் தொல்லை அது தான்;-))) (அப்பா, ஒரு சிரிப்பான் போட வாய்ப்பு வந்தது!!)
பயணமும் நன்றாய் அமைந்துவிட வேண்டிக் கொள்கிறேன்.
கெ.பி.

பாலராஜன்கீதா said...

உங்களின் மன உறுதிக்கும் துணிவிற்கும் பாராட்டுகள். விரைவில் நன்கு நலம் பெற இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.

Anonymous said...

God's Grace. Get well soon.
I'll continue to pray for you.

Anonymous said...

Praise God!
May God be with you and heal you dear!

Luv n prayers,
Sandanamullai

ஜே கே | J K said...

விரைவில் குணமடைய வாழ்த்துக்கள், உங்களுக்காக எப்போதும் இறைவனிடம் எங்கள் பிரார்த்தனை உண்டு...

Osai Chella said...

Enathu pirantha naal andru thaayakam thirumbum thozhiyar'ku enathu vaazhthukkal!

anbudan
osai chella

CVR said...

தாங்கள் பூரண குணம் அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா!!! :)

cheena (சீனா) said...

சகோதரி அனுராதா, சென்னைப் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள். தங்களின் மனவலிமை தங்களை வாழ வைக்கும் ஆற்றல் வாய்ந்தது. மனந்தளர வேண்டாம். சக வலைப்பதிவர்களின் வாழ்த்துகளும்கூட்டுப் பிரார்த்தனைகளும் என்றும் உண்டு.

தொடர்க பயணத்தை - இடுக இடுகைகளை - வலம் வருக மற்ற பதிவுகளை - மகிழ்வாக இருக்க வாழ்த்துகள்.

Anonymous said...

பரிபூரண குணமடைய வாழ்த்துக்கள் அனும்மா!!!!

வின்சென்ட். said...

பரிபூரண குணமடைய வாழ்த்துக்கள். உங்களுக்காக ஒரு பதிவை sept 9,2007அன்று இட்டிருக்கிறேன்."புற்று நோயும், கோதுமை புல் சாறும்." http://maravalam.blogspot.com/2007_09_01_archive.html இல் பார்க்கலாம்.சென்னை வந்தவுடன் அதனை பாருங்கள். உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

oru Elaththu thamilan said...

அன்பின் ச்கோதரி!!

முதலில் உங்கள் தைரியம்தான் என்னைக் கவர்ந்தது. முகமறியா அன்பு உள்ளங்கள் பல உங்களைச் சூழ்ந்து இருக்கின்றோம். பிரார்த்தனைகளும் நல்லெண்ணங்களும் ஒருபோதும் வீணாகாது. நிச்சயம் நலமடைந்து பிரகாசிப்பீர்கள். உங்கள் கவலைகள் எல்லாம் மறைந்துவிடும்.
கந்தசஷ்ட்டி இறுதினாளில் மனதுருக வேண்டுகின்றேன்.
" துள்ளி வருகுது வேல் தூரப்போய்விடு பகையே".


ஒரு ஈழத்து தமிழன்

oru Elaththu thamilan said...

அன்பின் ச்கோதரி!!

முதலில் உங்கள் தைரியம்தான் என்னைக் கவர்ந்தது. முகமறியா அன்பு உள்ளங்கள் பல உங்களைச் சூழ்ந்து இருக்கின்றோம். பிரார்த்தனைகளும் நல்லெண்ணங்களும் ஒருபோதும் வீணாகாது. நிச்சயம் நலமடைந்து பிரகாசிப்பீர்கள். உங்கள் கவலைகள் எல்லாம் மறைந்துவிடும்.
கந்தசஷ்ட்டி இறுதினாளில் மனதுருக வேண்டுகின்றேன்.
" துள்ளி வருகுது வேல் தூரப்போய்விடு பகையே".


ஒரு ஈழத்து தமிழன்

Anonymous said...

Oh! I'm so glad Anuratha.

-Mathy

Anonymous said...

நீங்கள் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தமிழ்பித்தன் said...

எல்லாம் வெல்ல கடவுளின் ஆசியும் அனைத்து நண்பர்களின் வேண்டுதலும் உங்களின் தன்நம்பிக்கையும் என்றும் உங்களுடனே இருக்கும்
வெகுவிரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சகோதரி!
தலைப்பு மட்டற்ற மகிழ்ச்சி தந்தது.
இதற்கு முன் இட்ட பதிவு, சோர்வையும் வேதனையையும் தந்தது.
'ஆறுமுகன் ஆறுதல் தரட்டும்'
வெல்லுங்கள்.

அனுராதா said...

அனைவரின் வாழ்த்துகளுக்கும்,பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
வாங்க ஓசை செல்லா.எனது அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்.
வாங்க மதி கந்தசாமி."குளோபல் வாய்சஸ் ஆன்லைன்"ல் என்னைப் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள்.நன்றி.

ஆயில்யன் said...

தாங்கள் பூரண குணம் அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா!!! :)

தென்றல் said...

கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது, அம்மா!

வியக்க வைக்கிறது... உங்களின் மன உறுதி...பாராட்டுகள்!!

பிராத்தனைகள் தொடரும்...

Ungalranga said...

உங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு எனக்கு வயதில்லை.
இருந்தாலும் என் சகோதரியாய் நினைத்து ஒரு சின்ன வேண்டுகோள்.
உங்களின் உடல்நலம் பெருக நீங்கள் தினசரி சிறிது நேரம் நகைச்சுவை காட்சிகளை பார்த்து மனம் விட்டு சிரியுங்கள் .
இது உங்கள் மன நிலை மற்றும் உடல் நிலையில் இன்னும் நல்ல முன்னேற்றம் அளிக்கும்.
தாங்கள் பூரண குணம் அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

சகோதரி, தங்கள் சென்னைப் பயணம் இனிதே நடந்து தங்கள் உடல் நோவில் இருந்து தாங்கள் குணம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அனைவரின் பிரார்த்தனையும் உங்களை நிச்சயம் காப்பாற்றும். உங்கள் மன உறுதி உங்களைக் காக்கும்.

Unknown said...

Dear Anu,
Happy New year and get well soon.Your courage influenced me very much.How are you now?Why did you stop yr.writing?


Uma