Monday, June 16, 2008

சூன் மாத செக்கப்பும் முடிந்தது.

பலவிதமான வீட்டுப் பிரச்சனைகளால் பதிவிட முடியவில்லை.இம்மாதம் 2ம் தேதி மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொண்டேன்.ஒரு பிரச்சனையும் இல்லை.வலது மார்பகத்திற்குக் கீழே லேசாகப் புண் ஆகியுள்ளது.டாக்டர் அதற்கு ஒரு ஆயின்மெண்ட் கொடுத்துள்ளார்.தலைவலி வருவது தற்போது குறைந்துள்ளது.முன்பெல்லாம் தினமும் மாத்திரை சாப்பிட்டாலும் சரி சாப்பிடாவிட்டாலும் சரி.தலை அதுபாட்டுக்கு வலித்துக்கொண்டே இருக்கும்.இப்போது இல்லை.

இன்னொரு சந்தோஷமான விஷயம்,சர்க்கரை நோய் ஒரு கட்டுக்கு வந்து விட்டது.முன்பெல்லாம் சென்னையில் இருக்கும்போது தினமும் இன்சுலின் ஊசி(HUMENSULIN30/70) மூன்றுவேளையும் போட்டுக் கொண்டிருந்தேன்.அத்துடன் மாத்திரைகள் மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.இப்போது ஊசி போட்டு பதினைந்து நாட்கள் ஆகிறது.
மாத்திரையும் மதியம் மட்டும் தான்.

அடுத்ததாக மதுரை வில்லாபுரத்தில் புது வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.லின்டல் வரை வந்துள்ளது.இந்த வாரம் சென்டரிங் போடப் போகிறார்கள். வரும் ஆவணி மாதத்திற்குள் முடித்துத் தந்து விடுகிறேன் என்று பில்டர் சொல்லி இருக்கிறார்.செப்டம்பரி மாதம் முதல் வாரத்தில் குடி புகலாம் என்று எண்ணி இருக்கிறேன்.என் சிந்தனையை வேறு வழிகளில் செலுத்துவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

9 comments:

Anonymous said...

Very happy to see the progreess madam. Good that you are very confident and diverting yourself in other issues.

I believe moving from Chennai to other place is also a good idea. I will also pray for you to recover completely very soon.

லக்கிலுக் said...

//ஒரு பிரச்சனையும் இல்லை.//

அப்புறம் என்ன?

மதுரையில் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டுக்கு வாழ்த்துக்கள்.

கிரி said...

அம்மா சந்தோசமாக இருக்கிறது. நலமுடன் வாருங்கள்.

உங்கள் புது வீடு சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நிலா said...

கேக்கவே சந்தோஷமா இருக்கு

அனுராதா said...

வாங்க குமார்,கிரி.நிலா நன்றி.
வாங்க லக்கி லுக்.உங்களுடைய வலைப்பதிவை என் கணவர் தினமும் படிப்பார்.சிறப்பாக எழுதும் ஒரு சில பதிவர்களில் நீங்களும் ஒருவர் என்று சொல்லி இருக்கிறார்.நன்றி.

NK Valli said...

Dear Fellow Survivor

May God give us abundance of strenght to overcome all challenges. Lets us be surrounded with love, peace and happiness.

Valli

Vassan said...

நிறைய அருகம்புல் சாறு குடியுங்கள். அதுவும் காலையில், வெறும் வயிற்றில்.

எனக்கு நிறைய உதவியது, புத்துணர்ச்சியை கொடுத்தது.

வாழ்த்துகள்.

வாசன்

நியு மெக்ஸிக்கோ - அமேரிக்கா



vassan.kollidam.com

Anonymous said...

I agree with Kumar Sir comments. Keep getting better.

Ravi

cheena (சீனா) said...

சகோதரி அனுராதா,

மனம் மகிழ்வாக இருக்கிறது. ஆவணித் திங்களில் அருமையான இல்லம் புது மனை புகு விழா சிறப்பாக நடந்தேற நல் வாழ்த்துகள்