Thursday, July 24, 2008

மருத்துவ சிகிச்சை தொடர்கிறது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரு தினங்கள் கழித்து அருமை நண்பரும் சக பதிவருமான சீனாவும் அவரின் மனைவியாரும் நேரில் வந்து நலம் விசாரித்தார்கள்.அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

உடனடியாகக் கொடுக்கப்படவேண்டிய சிகிச்சைகள் கொடுத்து முடிந்தன.முன்பு அவாஸ்டின் என்ற மருந்து கொடுத்ததைப் போல் இன்றைய தேதிக்குப் புதிதாக ஏதேனும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்திருந்தால் அதனைத் தயங்காமல் கொடுக்க ஏற்பாடு செய்யும்படியும்,செலவைப் பற்றிக் கவலை இல்லை என்றும் டாக்டரிடம் கூறினேன்.பெரும்பாலான மருந்துகள் அனைத்துமே அனுவுக்குக் கொடுக்கப்பட்டு விட்டன என்றார் டாக்டர்.அனுவின் இன்றைய நிலையை அனுசரித்து"TEMOZOLOMIDE--250 mg"என்ற கேப்சூல் வடிவிலான கீமோ மாத்திரையை ஐந்து நாட்களுக்குக் கொடுக்கலாம் என்று முடிவு செய்து அதன்படியே சென்ற22ந் தேதி செவ்வாய்க் கிழமை முதல் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.காலை ஆறு மணிக்கு எல்ட்ராக்சின் என்ற தைராய்டு மாத்திரை,ஏழு மணிக்கு எமிசெட் என்ற வாந்தி வருவதைத் தடுக்கும் மாத்திரை,எட்டு மணிக்கு மேற்சொன்ன டெமோசோலமைட் என்ற கீமோ மாத்திரை ஆக இம்மூன்று மாத்திரைகளும் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.அவ்வாறே அனு உட்கொண்டு வருகிறாள்.வரும் சனிக்கிழமையோடு முடியும்.அதன் பின் 23 நாட்களுக்கு மேற்படி மாத்திரை இல்லை.இவ்வாறாக 28 நாட்கள் கொண்ட ஒரு சுற்று முடிவுற்றபின் அடுத்த மாதம் 18ந் தேதியன்று மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள்.இடைப்பட்ட நாட்களில் மீண்டும் வலிப்பு வராமல் தடுக்க வேண்டிய மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்ளவும் சொல்லி இருக்கிறார்கள்.

நேற்று 23ந் தேதி அனுவை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன்.மிகவும் அசதியாக இருந்தாலும் மன உறுதியுடன் இருக்கிறாள்.

..........................................அனுராதாவின் கணவன்.............................................................

6 comments:

cheena (சீனா) said...

மிக்க மகிழ்ச்சி - மன உறுதி தளராத சகோதரி அனுவினிற்கு ஒரு குறையும் வராது - நல்வாழ்த்துகள்

SK said...

மன உறுதியோடு இருந்து எல்லாவற்றையும் எதிர் கொண்டு மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.


குமார்

Madurai citizen said...

மிக்க மகிழ்ச்சி எல்லாவற்றையும் எதிர் கொண்டு உறுதியோடு இருந்து வர மன உறுதி தளராத சகோதரி அனுவினிற்கு நல்வாழ்த்துகள்

கிரி said...

ஆண்டவனை வேண்டுகிறேன்

Geetha Sambasivam said...

சகோதரியின் மன உறுதிக்கும், முயற்சிக்கும் வாழ்த்துகள் தெரிவிப்பதோடு, இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். அவர் இந்தத் துன்பத்தில் இருந்து விரைவில் மீண்டு வரப் பிரார்த்தனைகளுடன்

அனுராதா said...

வருகை தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

.......அனுராதாவின் கணவன்.....