Thursday, October 18, 2007

மார்பகத்திலிருந்து கல்லீரலுக்குப் பரவிய புற்றுநோய்(மெடாஸ்டிக் கேன்சர்)

கர்ப்பப்பை ஆபரேசன் முடிந்து ஐந்துநாட்கள் மருத்துவமனையில் இருந்தேன்.ஆறாவது நாள் டிஸ்சார்ஜ் ஆனேன்.குனியக் கூடாது. பாரம் சுமக்கக் கூடாது.மூன்று மாதம் கம்ப்ளீட் ரெஸ்ட்டில் இருக்க வேண்டும்.ஒரு வாரம் கழித்து செக்கப்புக்கு வந்துவிடுங்கள் என்று டாக்டர் அறிவுறுத்தினார்.வைடமின் ஈ,கால்சியம் மாத்திரைகள் ஆகியவகளுக்கு எழுதிக்கொடுத்தார்கள்.
வீட்டுக்கு வந்தேன்.இடுப்பு வலி ஆரம்பித்தது.கடுமையான வலி.அதற்கான மருந்துகளை ஏற்கனவே மருத்துவமனையில் கொடுத்திருந்தார்கள்.அவைகளை உட்கொண்டேன்.மூன்று நாளாகியும் வலி
குறையவில்லை.மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டேன்.

டாக்டர் சொன்னபடி மறுவாரம் சென்று சந்தித்தேன். வழக்கமான பரிசோதனைகள் முடிந்தன.ஆபரேசன் செய்த இடம் நன்றாகச் சேர்ந்துவிட்டது என்று டாக்டர் சொன்னார்.இடுப்பு வலிக்கும் மூன்று நாளுக்கு மாத்திரை கொடுத்தார்.


மூன்று நாளாகியும் வலி நிற்கவில்லை.மீண்டும் மருத்துவமனை சென்று டாக்டரைப் பார்த்தோம்.கர்ப்பப்பை ஆபரேசனுடன் தங்கள் வேலை முடிந்துவிட்டது என்றும் இடுப்புவலிக்குத் தற்காலிகமாக மட்டுமே மாத்திரைகள் கொடுத்ததாகவும்,மேலும் இடுப்பு வலித்தால் எலும்பு முறிவு டாக்டரைப்(ஆர்த்தோ ஃபிஸீசியன்)பார்க்குமாறும் கூறி அனுப்பிவிட்டனர்!!


இடுப்புவலிக்குத் தீர்வு காண வேண்டுமே?சென்னையில் டாக்டர்களுக்கா பஞசம்?அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் கிளினிக் வைத்திருக்கும் டாக்டர் அண்ணாமலை என்பவரிடம் சென்றோம்.என் கதை முழுவதையும் பொறுமையாகக் கேட்டார்.பொதுவாக கர்ப்பப்பை ஆபரேசன் செய்து கொண்டவர்களுக்கு இடுப்புவலி வருவதில்லை என்றும் ஆனால் கேன்சர் நோய்க்காக ரேடியேசன்,பிராக்கிதைரபி போன்ற கதிரியக்க சிகிச்சை மேற்கொண்டதால் உடலில் உள்ள எல்லா எலும்புகளும் பலவீனப்படும் என்றும் கூறினார்.அதன் விளைவுதான் இந்த இடுப்புவலி என்றார். பிசியோதைரபி சிகிச்சை செய்தார். வலிக்குத் தற்காலிகமாக் வேறு மாத்திரைகளைக் கொடுத்தார்.முதல்ஒரு வாரம் தினமும்,பின் வாரத்திற்கு இரு முறையும் வந்து பிசியோதைரபி சிகிச்சை செய்து கொள்ளும்படியும் சொன்னார்.அதன்படியே சென்று சிகிச்சை பெற்றேன்.ஒரே மாதத்தில் இடுப்பு வலி மறைந்தது.


வழக்கம் போல செக்கப்பிற்கு பேட்டர்சன் கேன்சர் செண்டருக்குச் சென்று வந்தேன்.லேட்ரொனேட் மாத்திரையைத் தொடந்து சாப்பிடுமாறு டாக்டர் கூறினார்.அதன்படியே மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தேன்.

2006 நவம்பர் மாதம் 13ந்தேதி வாக்கில் வலது மார்பகத்தில் மீண்டும் புண்கள் ஏற்பட ஆரம்பித்தன.எனவே 15ந்தேதியன்று உடனே மருத்தவமனை சென்றோம்.டாக்டர் பரிசோதித்துப் பார்த்தார்.மீண்டும் புண் வ்ரக் கூடாதே!என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார். உடனே எல்லவித டெஸ்டுகளும் எடுக்கவேண்டும் என்றார். 16,17 ஆகிய தேதிகளில் பலவிதமான பிளட் டெஸ்ட்,தைராய்டு டெஸ்ட்,லிவர் ஃபங்சன் டெஸ்ட்,எக்ஸ்ரே,ஈ.சி.ஜி.,அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்,எக்கோ,சி.டி.ஸ்கேன்,எம்.ஆர்.ஐ.ஸ்கேன்,நியூக்ளீயர் போன் ஸ்கேன் ஆகிய டெஸ்டுகள் எடுக்கப்பட்டன.முக்கியமாகப் புண்ணிலிருந்து திசுக்களை எடுத்துப் பயாப்ஸிக்கு அனுப்பினார்.அனைத்து ரிப்போர்ட்டுகளும் 18ந்தேதியே கிடைத்தன.அன்றே டாக்டரைப் பார்த்தோம்.
ரிஸல்ட்?


1.மார்பகத்தில் மீண்டும் புற்றுநோய் பரவ ஆரம்பித்தது.அது மட்டுமல்லாமல்
மார்பகத்திலிருந்து கல்லீரலுக்கும் புற்றுநோய் பரவியிருந்தது.மெடாஸ்டிக் கேன்சர் என்று இதற்குப் பெயராம்.
2.நீரழிவு நோய் தாக்கியுள்ளது.வெறும் வயிற்றுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவு வெறும் வயிற்றுடன் 280. காலை உணவு சாப்பிட்ட ஒன்றரை மணிநேரம் கழித்து 468.ஆக இருந்தது.

8 comments:

வடுவூர் குமார் said...

ஹூம்! சக்கரை வேறா?
படாத பாடு போறவில்லை போலும்.:-(

அனுராதா said...

வாங்க வடுவூர் குமார்.என்ன செய்றது?

cheena (சீனா) said...

2006 நவம்பர் - சர்க்காரை நோய் வேறு. ம்ம்ம்ம்ம் - என்ன செய்வது ?? எதிர் கொள்ளத்தான் வேண்டும் சகோதரி

அனுராதா said...

ஆமாம் சீனா.

VSK said...

கல்லீரலுக்கு கேன்சர் பரவியதை விட, சர்க்கரை நோய் ஒன்றும் பெரிய விஷயமில்லை.

சீக்கிரம் மேலே சொல்லுங்கள்.

அனுராதா said...

வாங்க விஎஸ்கே.முடிந்தவரை சீக்கிரம் சொல்லிக்கொண்டே வருகிறேன்.நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவ்வளவு வருத்தம் , அலைச்சலுடன்
இவற்றை வரிசைக்கிரமமாக ஞாபக்கிடக்கில் இருந்து மீட்பது.ஆச்சரியமாக உள்ளது.

அனுராதா said...

வாங்க யோகன் பாரிஸ்.நாட் குறிப்பில் அன்றாட அனுபவங்களைக் குறித்து வைத்துள்ளேன்.மருத்துவமனைக்குச் சென்றது முதற்கொண்டு,டாக்டருடன் நடந்த உரையாடல்,பெற்ற சிகிச்சைகள்,வாங்கியமருந்துகள்,ஊசிகள் சந்தித்த பிரபலங்களுடன் நடந்த உரையாடல்கள் ஆகிய அனைத்துக்கும் சிறு சிறு குறிப்புகள் எழுதி வத்துள்ளேன்.