வெள்ளிக்கிழமையும் வந்தது.முற்பகலில் டாக்டர் வந்து பார்த்தார்."எப்படி இருக்கீங்க"என்று கேட்டார்."நன்றாகவே இருக்கிறேன்"என்றேன்."சரி.இன்று ரேடியேசன் முடிந்தபின் நீங்கள் வீட்டுக்குப் போகலாம்.இன்னும் இரண்டு வாரங்களுக்கு தினமும் வீட்டிலிருந்து வந்து ரேடியேசன் வைத்துக்க்கொள்ளுங்கள்.ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனே தொடர்பு கொள்ளுங்கள்"என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.அதன்படியே அன்று
ரேடியேசன் முடிந்ததும் டிஸ்சார்ஜ் ஆகி சாயந்திரம் ஆறு மணிவாக்கில் வீட்டுக்கு வந்துவிட்டோம்.
மறுநாள் சனிக்கிழமையன்று காலையில் எழுந்து பார்த்தால் தலையணையில் முடி கொட்டியிருந்தது.சீப்பை எடுத்து லேசாகத் தலை வாரினேன்.சீப்பு பூராவும் முடி.பத்து நாட்கள் கீமோ மாத்திரை சாப்பிட்டதன் விளைவு.அடுத்து ஞாயிறன்றும் திங்களன்றும் கொஞ்சம் முடி கொட்டியது.இன்று செவ்வாய்க்கிழமை பின்பக்கம் அதிகமாகவே முடி விழுந்திருந்தது.கையால் தொட்டாலே முடி கற்றை கற்றையாகக் கையோடு வந்தது.என் கணவர் கொஞ்சம் கொஞ்சமாக முடி பூராவும் கையாலேயே பிடுங்கி விட்டும்,கத்தரிக்கோலால் வெட்டியும்,ரேசரால் மழித்தும் விட்டார்.சென்னையில் கீமோதெரபியின்போது முடி விழுந்து ஏற்கனவே ஒரு தடவை தலை மொட்டையான அனுபவத்தினால் இப்போது கவலைப்படவில்லை.இவ்வாறாக மீண்டும் தலை அழகாக மொட்டையானது.
நேற்றும் இன்றும்(திங்கள்,செவ்வாய்) மீனாட்சி மிசன் மருத்துவமனை சென்று ரேடியேசன் வைத்துக்கொண்டேன்.
சொல்ல மறந்துவிட்டேனே!என் அருமைக் கணவருக்கு இன்று 62 வது பிறந்த நாள்.பாரதியார் பிறந்த நாளில் பிறந்ததால் இவருக்கு சுப்பிரமணியன் என்றே பெயர் வைத்தாராம் என் மாமனார்.என்ன பாவம் செய்ததால் இப்பாழும் புற்றுநோய் வந்ததோ தெரியவில்லை.ஆனால் இவரைக் கணவராகப் பெற்றதற்கு நான் மிகுந்த புண்ணியம் செய்திருக்கவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
//தலை அழகாக மொட்டையானது// பக்குவப்பட்டுவிட்டீர்கள்!
மீண்டும் நலத்துடன் வாழ்வீர்கள்.
அனுராதா..
உங்கள் கணவருக்கு வாழ்த்துக்கள்... யாரும் எந்த பாவமும் பண்ணவில்லை
அப்படி ஏன் நினைக்கறீங்க அனுராதா..
கடவுள் துணை இருக்கார்....
//மீண்டும் நலத்துடன் வாழ்வீர்கள்.//
ரிப்பீட்டேய்.
உங்கள் கணவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உங்கள் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுராதா!!!
//அழகாக மொட்டையானது// இவ்வளவு சிரமத்துலயும் உங்களோட sense of humor அ ரசிச்சேன்!
அனு அம்மா,
உங்கள் மனபலம் சிலிர்க்க வைக்கிறது !
உங்கள் உற்ற துணையின் பிறந்த நாளுக்கு நல்வாழ்த்துக்கள்.
எஸ்.கே.எஸ் மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
அம்மா நலம்பெற இறைவனை வேண்டுகிறோம்..
தோழி நலம்பெற வாழ்த்துக்கள்! நண்பருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புச் சகோதரி - தலை அழகு ரசிக்கலாம் - கவலைப் பட வேண்டாம். சீக்கிரமே முடி முளைக்கும் -
அருமைத் துணைவருக்கு - இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்,
பணிச்சுமையும், பயணங்களும் வந்து பார்க்காததற்கு காரணங்கள்.
இறை அருளினால் சீக்கிரமே குணமடைவீர்கள்
/யாரும் எந்த பாவமும் பண்ணவில்லை/
அதான...
உங்கள் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
/தமிழ்நதி எழுதி மலைநாடான் பாடிய பாடல்/
உருக்கம்...
அனு,
உங்க மறுபாதிக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்து(க்)கள்.
சகோதரி!
இடுக்கண் வருங்கால் நகுக!என்பதை தங்கள் எழுத்தில் கண்டேன்...மொட்டையைக் கூட அழகாக நோக்கும் பக்குவம்.
அது மீண்டும் முளைக்கும்...
உடல் தேறட்டும்.
தங்கள் கணவனாருக்கு அன்பான வாழ்த்துக்கள்.
உங்கள் கணவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)
தோழி அனுராதா, மனம் தளரவேண்டாம். உடல் நலம் தேறும்.
உங்கள் கணவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
உடல் நலம் பெற வேண்டுகிறேன்!
உங்கள் கணவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
உங்கள் கணவருக்கு பிறந்ததின வாழ்த்துக்கள்.
என்ன பரிசு வாங்கிக் கொடுத்தீங்க?
வருகை தந்து வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி.
சர்வேசன்!பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும் என்று கேட்டேன்.நான் குணமடைந்து முன்பிருந்ததுபோல வாழ்வதைவிடச் சிறந்த பரிசு எதுவுமில்லை என்று கூறி விட்டார்.
உங்கள் மனோதைர்யமே உங்களுக்கு மருந்தாக அமையும்...அடுத்த வாரம் மதுரை வருகிறேன்..சீனா சாரிடம் இருந்து தொலைபேசி எண் பெற்றுக் கொண்டேன்..நேரில் தங்களைச் சந்திக்கிறேன்..
உங்கள் கணவருக்கு எங்கள் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள், சகோதரி, சீக்கிரமாய் உங்கள் உடல் நலம் தேறி விடும், பல்லாண்டு வாழப் பிரார்த்திக்கிறேன்.
உங்கள் உடல் நலம் தேறியிருப்பது கண்டு மகிழ்ச்சி....
உங்கள் கணவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் விரைவில் நலம் பெற்று பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
My Belated Birthday Wishes to Sir
வாங்க பாசமலர்.உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.வாங்க கீதா சாம்பசிவம்,மாஹிர்,உஷி!வருகைக்கு ந்ன்றி.
வாங்க ஓசை செல்லா,நல்லா இருக்கீங்களா?
அடடா, இன்றுதான் இந்த பதிவினை பார்த்தேன். மை பிலேட்டட் விஷஸ் டு ஹிம்.
நீங்க வீட்டுக்கு வந்துட்டீங்க அப்படிங்கறது நல்ல செய்தி....கடவுள் துணையிருப்பார்.
உங்கள் கணவருக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
நலம்பெற உங்களுக்கும் வாழ்த்துக்கள்...
வாழ்கையின் அர்த்தம் அனைவரிடமும் அன்பு செலுதுவது என்பதை
வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கும் அன்னைக்கும், தந்தைக்கும் வணக்கம்...
ஆனந்த விகடன் முலம் முகவரி அரிந்து வந்தேன்.........
வலிகளை வென்ற தாயே நீ என்றும் வாழ்வாய் எம் இதயத்தில்...
புரிந்துகொள்ள பழகிய நாமே பொறுத்துக்கொள்ள முடியவில்லை இந்த துயரத்தயும் வலிகளையும்....... அந்தோ குழந்தைகளின் நிலை........
sks அய்யாவின் வரிகளின் வழிகாட்டுதலில் (''நீ பத்து தடவை கீழே விழுந்ததைப் பற்றி இந்த உலகம் பார்ப்பதில்லை.பத்தாவது தடவையும் நீ எழுந்து நின்றாயா என்பதைத்தான் பார்க்கிறது.")
எதேனும் செய்ய வேண்டும் என்று முயர்சித்துக்கொண்டிருக்கும்.....
Happy birthday to Mr. Subramanian. Anuradha madam you are so lucky to have him. How many people have wonderful,thoughtful and careing husband like you? GOD will bless you both.
Rumya
hi anu ratha
if u dont mind , plz forward ur mail id for next upcomming singapore events invitations.
thankz
singh.jayakumar
அன்புள்ள அனு அம்மாவிற்கு,
நிச்சயம் விரைவில் குணமடைவீர்கள். இத்தனை அருமையானா குடும்பம் குடுத்த இறைவன் நிச்சயம் நீண்ட வாழ்நாள் குடுப்பார். எங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் உங்களுடன் இருக்கும்...
அன்பின் அனுராதா... ஆனந்த விகடனில் பார்த்து இன்றுதான் உங்கள் வலைப்பதிவிற்கு வந்தேன்... மனம் கலங்கிப்போனேன்...
தன்னம்பிக்கையோடு போராடுங்கள்... கண்டிப்பாய் நல்லதே நடக்கும்....
Dear Mam
what happen?? why no archieves from you for a long time???
சகோதரி,
விரைவாக குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்,
இராம்
எப்படியிருக்கீங்கம்மா?
புதிய பதிவு எதுவும் எழுதலியா?
Bleated birthday wishes to your hubby
நீங்கள் சீக்கிரம் நல்ல குணமடைந்து நார்மல் வாழ்க்கைக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் !!!
Post a Comment