சென்ற 24ந் தேதி எனது அத்தை ஒருவர் மாரடைப்பால் காலமாகி விட்டதால் மருத்துவமனைக்குப் போக முடியவில்லை.எனவே இன்று ஏப்ரல் 1ந் தேதி மருத்துவமனை சென்றுஎலும்பு ஸ்கேன்(bone scan) எடுத்துக்கொண்டேன்.No obvious demonstrable scintigraphic evidence of skeletal secondaries.என ரிசல்ட் வந்திருக்கிறது.டாக்டர் இதைச் சொன்னவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன்.
ஆக, தலைவலி,முதுகுவலி ஆகியவை சாதாரணமானது தான்.கவலைப்படத் தேவையில்லை என்று டாக்டர் கூறி விட்டார்."ரொம்பவும் யோசிக்காதீர்கள்.மனதை வேறு விஷயங்களில் திசை திருப்புங்கள்.எப்போதும் மனதை ரிலாக்சாக வைத்துக்கொள்ளுங்கள்" என்று சில அறிவுரைகள் சொன்னார்.
முயன்று பார்க்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//டாக்டர் இதைச் சொன்னவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன்.//
மகிழ்ச்சி..
ரிலாக்ஸாக இருங்கள்...
mika mika makizchiyaana seithi thaan amma! santhoshappada kaaranangal niraiya irukkum pothu relax aaka irungal!
anbudan
Osai Chella
மகிழ்ச்சி.
மனதை, ஏதாவதொரு கலைகளின் வழி திருப்புக்களேன்.
This is not a comment:
Could you please send me your email address to: sundara at gmail dot com.
I would like to bring some medical advances to your notice.
Thanks
Sundar
சகோதரி!
நல்ல செய்தி, இதை நினைத்து மகிழ்வோம்.
Anbulla Amma,
This is Suganthi.
Wanted to say something about your last blog. We have to think about your social awareness question. Ulagame ungalukkaga, neengal seyya ninaikkum samudhaya sevai patri sindhikka pogiradhu.
Bone scan result patri mikka magizhchi. Engalodu pagirndhu kondadharkku nandri.
Vaazhga valamudan...
எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கு.
வருகை தந்த புபட்டியன்,ஓசை செல்லா,மலை நாடான்,யோகன் பாரிஸ்,வடுவூர் குமார் ஆகியோருக்கு நன்றி.
சுந்தர வடிவேல்.நீங்க்கள் கேட்டபடியே உங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளேன்.
மகளே சுகந்தி!நன்றியம்மா!உனக்கும் இன்று மின்னஞ்சல் அனுப்ப்பியுள்ளேன்.
எனக்கு உங்களைப்போல் கடுமையான புற்று நோய் இல்லையென்றாலும், தைராய்ட் புற்று நோய்க்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டுளேன். ஆறு வருடங்கள் ஓடி விட்டன. எனக்கு சர்வைவல் 10 ஆண்டுகள் என்று மருத்துவர் கூறினார். அதன் பொருள் விளங்கவில்லை. இருப்பினும் இப்பொழுதெல்லாம் இரவில் தூக்கம் கலைந்து மனைவி மற்றும் எனது ஒரு குழந்தையின் எதிர்காலம் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுகிறேன்.(நான் அரசு வேலையில் இருந்தாலும் கூட) சுவாசக் கோளாறு, இருமல், பசியின்மை, என எது ஏற்பட்டாலும் செகண்டரிஸ் ஏதும் வந்துவிட்டதோ என பயந்துவிடுகிறேன். உங்களுக்கு அளிக்கும் சிகிச்சைகள்,படும் வேதனைகள் கண்டு எனகு கண்ணீர் வந்துவிட்டது. உங்களுக்கு ஆறுதல் சொல்ல எழுத நினைத்து இப்போது எனக்கு நானே ஆறுதலாகியிருக்கிறேன்.
R.S.Sivaprakash
ஆஹா,வாருங்கள் மதுரைப் பையன்.பயந்து ஆகப் போவது ஒன்றுமே இல்லை.மனைவி,குழந்தையின் எதிர்கால வாழ்வுக்கு இப்போதே திட்டமிடுங்கள்.வாழ்க்கையின் யதார்த்த நிலைக்கு வாருங்கள்.தொடர்ந்து டாக்டர் கூறும் அட்வைஸ் பிரகாரம் நடந்து கொள்ளுங்கள்.
கேன்சரோடு போராடும் சகப் போராளிக்கு என்உளமார்ந்த வாழ்த்த்துகள்.
சகோதரி,
இறைவனின் கருணைக்கு நன்றி - நல்ல செய்தி ஒன்று கேட்டமைக்கு மக்ழ்ச்சி - தொடர்க தோண்டினை - இயல்பாக ஓய்வாக மனதினை மாற்று வழியில் - தொடர்ந்திருக்கும் தொண்டினில் - செலுத்துங்கள்.
எத்தகைய உதவிகளாயினும் தயங்காமல் கேளுங்கள் - பங்களிக்க விரும்புகிறோம்.
நல்வாழ்த்துகள்
வாருங்கள் சீனா.நன்றி
Post a Comment