Monday, August 25, 2008

அனுராதாவின் தற்போதைய உடல்நிலை

சென்ற 27/07/2008ந் தேதி மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட அனுராதாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறது.தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
...................அனுராதாவின் கணவன்(திண்டுக்கல் சர்தார்)..................

38 comments:

அமர பாரதி said...

சர்தார் அவர்களே,

ஆண்டவன் உங்களுக்கு இதை தாங்கிக்கொள்ளும் மன வலிமையை அளிக்க பிரார்த்திக்கிறேன். உங்கள் மனைவி விரைவில் முழு நலம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கிரி said...

நலமுடன் அனுராதா அவர்கள் திரும்ப இறைவனை வேண்டுகிறேன்

Madurai citizen said...

எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

cheena (சீனா) said...

அன்புச் சகோதரி அனுராதாவின் உடல் நிலை குறித்து கவலைப்படுகிறேன். எல்லாம் வல்ல இறைவனை எந்நேரமும் பிரார்த்திக்கிறேன். உடல்நலம் தேறி மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்ப நல்வாழ்த்துகள்.

எப்படி தங்களைத் தேற்றுவது எனத் தெரியவில்லை.

பிரார்த்தனை செய்க ச்

SurveySan said...

:(

ஜோசப் பால்ராஜ் said...

ச‌கோத‌ரிக்காக‌ பிரார்திக்கிறேன்.
நீங்க‌ள் தைரிய‌மாய் இருக்க‌ வேண்டும்.

முத்துகுமரன் said...

நலம் பெற எனது பிராத்தனைகள்

லக்கிலுக் said...

:-(

விரைவில் அவர் நலம் பெறுவார் என்று நம்புகிறேன்.

லக்கிலுக் said...

:-(

விரைவில் அவர் நலம் பெறுவார் என்று நம்புகிறேன்.

லக்கிலுக் said...

:-(

விரைவில் அவர் நலம் பெறுவார் என்று நம்புகிறேன்.

நல்லதந்தி said...

விரைவில் அவர் பூரணநலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

உண்மைத்தமிழன் said...

அம்மா உடல் நலன் தேறி வீடு திரும்ப வேண்டும் என்றே முருகனிடம் வேண்டிக் கொள்கிறேன்..

Anonymous said...

இறைவன் அருளால் விரைவில் உடல்நலம் தேறி வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்.

Aruna said...

இறைவன் அருளால் அனுராதாம்மா கண்டிப்பாக நலமே வீடு திரும்புவார் நம்புங்கள்.
அன்புடனும்,பிரார்த்தனையுடனும்
அருணா

ers said...

நலம் பெற்று வாழ பதிவர்களின் கூட்டு பிரார்த்தனை பலன் தர எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன்.

Thamira said...
This comment has been removed by the author.
Thamira said...

அனு, விரைவில் நலம்பெறுவீர்கள், மனவலிமை துணை நிற்கட்டும்.!

Anonymous said...

எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

Krithika,
Houston - TX

தமிழன்-கறுப்பி... said...

கட்டாயமா எல்லா பிரச்சனையும் நீங்கி நலமாய் வீடு திரும்புவீங்க அனு அக்கா...

தமிழன்-கறுப்பி... said...

கட்டாயமா எல்லா பிரச்சனையும் நீங்கி நலமாய் வீடு திரும்புவீங்க அனு அக்கா...

தமிழன்-கறுப்பி... said...

கட்டாயமா எல்லா பிரச்சனையும் நீங்கி நலமாய் வீடு திரும்புவீங்க அனு அக்கா...

Anonymous said...

My sincere prayers for anu amma for her speedy recovery.

Tech Shankar said...



Really Very Sorry

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Osai Chella said...

maranaththai than ezhuththukkalaal vendra antha veeraanganaikku en anjalikaL.

Osai Chella

பரிசல்காரன் said...

அனுராதா அவர்கள் எல்லா பதிவர்கள் நெஞ்சிலும் நீங்காமல் நிலை பெற்று விட்டார்!

அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!

Anonymous said...

is anuradha amma ok? why there are some kaneer anjaligal?

please let us know

regards,
lata

Anonymous said...

may her soul rest in peace.

manjoorraja said...

அனுராதா அம்மா நம்மையெல்லாம் விட்டு பிரிந்துவிட்டாலும் அவரது எழுத்துக்கள் என்றும் நிலைத்து நிற்கும்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

டுமீல்ஜி said...

கீதாஞ்சலி [78]
-----------------------------------
பூரணப் படைப்பில் குறைபாடு!
-----------------------------------
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
----------------------------------
அகிலவெளித் தோற்றம்
புதிதாக
உதித்த போது, முதலில்
மகத்துவப் பேரொளியுடன் மின்னின
அனைத்து விண்மீன்களும்!
தெய்வங்கள் வான்மீன்களைச் சீராக
நெய்து கானம் பாடின,
இப்படி:
“பூரணச் சித்திரம் அக்காட்சி! அந்தப்
பூரிப்பில் ஏது கலப்பாட்சி?”
அப்போது ஒரு குரல் அலறித்
திடீரென எழுந்தது :
“ஒளித்தொடரில் எங்கோ ஓரிடத்தில்
பிளவு தெரிகிறது!
வானில் இடைவெளி தோன்றும்,
விண்மீன் ஒன்று
காணாமல் போய்!”
விண்மீன்கள் பதித்த பொன்வளையம்
முறிந்து போய்
அறுந்தது வீணையின் நாதம்!
நம்பிக்கை யிழந்து
வீறிட்டு
விம்மின மற்ற விண்மீன்கள்:
“அனைத்திலும் உயர்ந்தது
இழந்த விண்மீன்!
சொர்க்க உலகுக்கோர்
அற்புதம் அது.”
விண்மீனைத் தேடும்
முற்பாடு ஓயாமல் தொடர்ந்தது
அன்றைய நாள் முதல்!
ஒன்றிழந் ததால் சோக
விண்மீன் கூட்டம்
குறையெனக் கூக்குர லிட்டுப்
பூரிப்பிழந்தன புண்பட்டு!
காரிருள் சூழ்ந்த வானில்
புன்னகை பூண்ட விண்மீன்கள்
தமக்குள்ளே
மென்மையாய்ப் பேசிக் கொண்டன:
“வீணான தேடலிது,
காணாமல் போன வான்மீனைக்
கண்டு பிடிப்பது!
முற்றுப் பெறட்டும்,
அற்றுவிடா முழுத் தோற்றம்
தேடும் படலம்!”
-----------------------------------
வேறெதுவும் சொல்ல தெரியவில்லை சுயமாய்...டுமீல்ஜி

டுமீல்ஜி said...

கீதாஞ்சலி (79)
----------------------------------
மனவலியைத் தாங்குவேன்!
-----------------------------------
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
------------------------------------
இந்தப் பிறப்பில் நேராக நின்னைச்
சந்திக்கும் கட்டம்
எனக்கில்லை என்றாகி விட்டால்,
உனைத் தெரிசிக்கும் வாய்ப்பிழந்தேன்
என்பதை
உணர வேண்டும் நான்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!
வணிக உலகிலே
மணிக் கணக்காய் ஊழியத்தில் உழன்று,
தினமும் செல்வம் சேர்த்து
எனது பை நிரம்பி வழிந்தாலும்,
எதுவும் முடிவில்
சம்பாதிக்க வில்லை எனும் உணர்ச்சி
வெம்பி மேவுகிறது என்னிடம்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!
பெரு மூச்சுடன் களைத்துப் போய்,
தெரு ஓரத்து மண்தூசியில்
தணிந்த கட்டிலின் மீது நான்
குந்தும் போது, எனது
நீள்பயண மின்னும் கண்முன் உள்ளதென
நானுணர வேண்டும்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!
என்னறையில் தோரணங்கள் கட்டிப்
புல்லாங்குழல் இசை பொழிந்து,
சிரிப்பு வெடிகளில்
ஆரவாரம் செய்யும் போது,
வரவேற்று உன்னை நான் வீட்டுக்குள்
அழைக்க வில்லை யென
உணர வேண்டும்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!
------------------------------
டுமீல்ஜீ

டுமீல்ஜி said...

கீதாஞ்சலி (93)
---------------------------------
உத்தரவு பிறந்து விட்டது!
---------------------------------
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
-----------------------------------
பூரண ஓய்வெடுக்க
நேரம் நெருங்கி விட்ட தெனக்கு!
அனுப்பி வைப்பீர் விடையளித்து
எனதருமைச் சோதரரே!
புறப்படு கிறேன் சிரம் தாழ்த்தி
அனைவருக்கும்!
ஈதோ!
என் வீட்டுச் சாவி,
எடுத்துக் கொள்வீர்!
விட்டுச் செல்கிறேன்,
என் வீட்டுச் சொத்துக்கள்
எல்லாம்!
கடைசியாய் வழியனுப்பும்
உமது
கனிவு மொழிகளை
வேண்டி நிற்கிறேன்!
நீண்ட காலமாக
அண்டை வீட்டு அயலவராய்
ஒன்றா யிருந்தோம்!
என் வாழ்வில் பிறர்க்கு நான்
கொடுத்ததை விட,
எனக்குக்
கிடைத்தவை மிகையே!
பொழுது புலர்ந்தது இன்று.
வெளிச்சம் தந்த விளக்கு,
அணைந்தது,
வீட்டு மூலை யிருட்டில்!
உத்தரவு
எனக்கு வந்து விட்டது!
தயாராகி விட்டேன்,
இறுதிப்
பயணம் துவங்க!
-----------------------------------
டுமீல்ஜீ

டுமீல்ஜி said...

கீதாஞ்சலி (94)
-----------------------------------
நான் பிரியும் வேளை!
------------------------------------
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
------------------------------------
நல்விடை கூறி என்னை,
அனுப்பி வைப்பீர்
நண்பர்களே,
நானும்மைப் பிரியும் வேளை!
வானம் பளிச்சென வெளுத்து விட்டது!
வனப்பு பொங்கு தென் பாதையில்!
எடுத்துக் கொண்டு செல்வது
என்ன வென்று கேளாதீர் என்னை.
வெறுங் கையாய்ப் பயணத்தில்,
புறப்பட்டேன்,
பிறர் அளிப்பதை எதிர்பார்த்து!
அப்போது நான்
திருமண மாலை கழுத்தில்
அணிந்து கொள்வேன்!
பயணிகள் உடுத்திக் கொள்ளும்
பழுப்பு நிற ஆடை
ஏகும் எனக்கு ஏற்ப தில்லை!
போகும் பாதையில்
அபாயம் நிரம்ப உள்ளன!
ஆயினும் நெஞ்சில்
அச்ச மில்லை எனக்கு!
வானத்தில்
முளைத்தெழும் வெள்ளி,
என் பயணம்
முடியும் தருவாயில்!
எந்தன் அதிபதி வீட்டு முற்றத்தில்
அந்தி மங்கிய
துன்ப மயக் கீதங்கள்
அடித்துக் கொண்டு எழுந்திடும்,
அவ்வேளை!
---------------------------------------
டுமீல்ஜீ

Yazhini said...

அம்மா அனுராதாவின் பிரிவால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு மன உறுதியும், அமைதியும் பெற்றிட வேண்டுகிறோம்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

கணவரும் பிள்ளைகளும் உறுதியோடு கலங்காது வாழ்வேண்டுமென விரும்புகிறேன்.

கண்ணீர் அஞ்சலிகள்.

மதுவதனன் மௌ.

சுரேகா.. said...

மனம் கனக்கிறது...!

என்றாவது ஒருநாள் புற்றுநோய்க்கான
அழிப்பான் கண்டுபிடித்துவிட்டு
காத்திருக்கிறோம்.
அப்போது பிறந்துவாருங்கள்
அனுராதா அம்மா!

கண்ணீருடன்...

Madurai citizen said...

தினமலர் மூலம் தெரிந்துகொண்டேன்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

Jai Sai Ram
R.S.Sivaprakash

Anonymous said...

அம்மா அனுராதாவின் பிரிவால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு மன உறுதியும், அமைதியும் பெற்றிட வேண்டுகிறோம்

அனுராதா said...

ஆறுதல் கூறி என்னையும் என் குடும்பத்தினரையும் தேற்ற முயற்சி செய்த அன்பு நெஞ்சங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்,
இப்போதைக்கு நன்றி சொல்வதைத் தவிர?
.....அனுராதாவின் கணவன்.....