Saturday, August 30, 2008

"வாழ்வெனும் மண்பாண்டமே உடைந்ததடா விதியினாலே"

வாழ்வெனும் மண்பாண்டமே
உடைந்ததடா விதியினாலே

பார் மானிடனே
உடைந்ததடா உன் வாழ்க்கை
இதய தாகம் தணியுமா
இனியும் சோகம் தீருமா

கடலினில் அலை ஓயாது
கலைந்திடும்
உன் மனத்துயர் நீங்காது
மருந்தில்லாத நோயடா
மரணமே இனி சரணமடா

அனுராதாவின் கணவன்(திண்டுக்கல் சர்தார்)

32 comments:

கோவி.கண்ணன் said...

உங்கள் துணையின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று :(

உங்களுக்கு மன அமைதி கிடைக்கட்டம், கொஞ்ச நாள் வெளியூர் சென்று தங்கிவிட்டு வாருங்கள்.

பரிசல்காரன் said...

உங்கள் துக்கத்தை புரிந்து கொள்ள, பகிர்ந்து கொள்ள முடிகிறது. உங்களுக்கு நேர்ந்த இழப்பு ஈடு செய்ய இயலாததுதான்.

காலம் உங்களுக்கு இந்தச் சோகத்தைத் தாங்கி, முன்னேறும் துணிவைத்தர பிரார்த்திக்கிறேன்.

:-(

ஜோசப் பால்ராஜ் said...

உங்கள் சோகம் ஈடு செய்ய முடியாத ஒன்று. உங்களுக்கு மன ஆறுதலைத்தர இறைவனை வேண்டுகிறேன்.

யட்சன்... said...

ஐயா...

நீங்கள் மிகத்தைரியமான ஒரு பெண்மணியின் பெருமையான, அன்பான கணவர் என்பதை மறந்துவிடாதீர்கள்.

காலம் உங்களின் காயங்களை ஆற்றட்டும்.

நந்து f/o நிலா said...

என்னவென்று ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை சார். :(

ரவி said...

பெங்களூர் பக்கம் வரும் ஐடியா இருக்கா ?

வந்தால் அழைக்கவும்...

King... said...

என்ன சொல்வது...

நிகழத்தான் செய்கிறது துன்பங்கள் விருப்பம் இல்லாவிட்டாலும்...

SurveySan said...

:(

///அனுராதாவின் கணவன் (திண்டுக்கல் சர்தார்)////
என்பதை 'அனுராதா' என்றே மாற்றி அவர் எழுதிய பதிவை அப்படியே விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் புதிய பதிவோ, புதிய account துவங்கினால் நல்லது.

dondu(#11168674346665545885) said...

துணையை இழப்பது மிகவும் கொடுமை. இதைத் தாங்கும் மன உறுதியை ஆண்டவன் உங்களுக்கு வழங்கட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வருண் said...

வருந்துகிறேன் உங்கள் ஈடு செய்யமுடியாத இழப்பை எண்ணி :(

உருகியோடும் மெழுகு போன்று "மார்புப்புற்று நோய் அவேர்னெஸ்" என்கிற ஒளியை மற்றவருக்கு வீசிவிட்டு தெய்வமாகிவிட்டார், உங்களவர்!

பெண்களில் எட்டில் ஒருவருக்கு (1/8) இந்த வியாதிவர வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்!

அனுராதா said...

வாங்க கோவி.கண்ணன்.ஊர் ஊராக கோயில் கோயிலாகச் சுற்றத்தான் போகிறேன்.சடங்குகள் முடிவதற்காகக் காத்திருக்கிறேன்.ஆலோசனைக்கு நன்றி.

வாங்க பரிசல்காரன்,ஜோசப் பால்ராஜ்,யட்சன்,நந்துf/oநிலா,கிங்,டோண்டு,வருண் நன்றி.

வாங்க செந்த்ழல் ரவி.வெகு விரைவில் பெங்களூருவுக்குக் கண்டிப்பாக வருவேன்.வரும்போது தொடர்பு கொள்கிறேன்.நன்றி.

வாங்க சர்வேசன்.இந்த ஒரு பதிவு மட்டும் அனு காலமான பிறகு பதிவது என்பதால் posted by ///அனுராதாவின் கணவன் (திண்டுக்கல் சர்தார்)////என்று போடுவதற்காகப் புரொஃபைலில் மாற்றங்கள் செய்தேன்.ஆனால் அது எல்லாப் பதிவுகளிலும் மாறியுள்ளது.தற்போது மாற்றி விட்டேன்.நன்றி.

....அனுராதாவின் கணவன்.....

ஆதிபகவன் said...

உங்கள் மனைவியின் இழப்பிற்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். தைரியமாக இருங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அமைதியைத் தருவார்.

அனுராதா said...

வாங்க ஆதி பகவன்.நன்றி

M.Rishan Shareef said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.
இழப்பின் வலியைத் தாங்க இறைவன் உங்களுடன் துணையிருப்பான்.

Anonymous said...

//ஊர் ஊராக கோயில் கோயிலாகச் சுற்றத்தான் போகிறேன்//

கண்டிப்பாக இதனால் மன அமைதி பெறுவீர்கள்......வாழ்க்கையின் உண்மையான பொருள் விளங்கும்.....காலம் உங்களின் காயங்களை ஆற்றும்.....

அனைத்து துன்பங்களையும் அனுபவித்தாகிவிட்டது....இனி உங்களுக்கு இறைவன் மன அமைதியை அருள பிரார்த்திக்கிறேன்.......

முரளிகண்ணன் said...

என் ஆழ்ந்த அனுதாபங்கள். மனம் தளர வேண்டாம்

தருமி said...

பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் முகங்களில் உங்கள் துணைவியார் என்றும் உங்களுடன் இருப்பார்கள்.

உங்களுக்கு நானென்ன சொல்ல ... தைரியமாயிருங்கள்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

உங்கள் மனைவியின் ஆத்மா சாந்தி அடையவும் , உங்களுக்கு மன அமைதி கிடைக்கவும் இறைவன் அருள் புரிவானாக !

M.Rishan Shareef said...

கடந்த வருடம் நவம்பரில் எனது தோழியும் புற்றுநோயால் இறந்தாள். அப்பொழுது 21 வயது அவளுக்கு.

அவளுக்காக நான் எழுதிய கவிதையிது.
செல்வி ஸ்ரீஜான்சி செந்தில்குமார்

Sanjai Gandhi said...

எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.. உங்கள் சோகத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன். :(

SUDAR OLI said...

சொல்லொணா துயரம் நெஞ்சில் எழும்போது.....என்ன சொல்ல...எப்படி ஆறுதல் கூற..

காலன் செய்த வேலைக்கு காலமே மருந்து...

ருக்மணி

ers said...

காலன் செய்த கோலம் இது...
கடவுள் செய்த குற்றமிது....

வல்லிசிம்ஹன் said...

எங்கள் ஆழ்ந்த வ்அருத்தங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். என்ன சொல்லி உங்களைத் தேற்ற முடியும்.
அனுராதா உங்கள் மேல் வைத்திருந்த அன்பு எனக்குப் பெருமையாக இருக்கிறது. நீங்கள் அவளிடம் காட்டிய பொறுப்பு இன்னும் பூரிக்க வைக்கிறது. அமைதி கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

Madurai citizen said...

சொல்லொணா துயரம்....

உங்களுக்கு மன ஆறுதலைத்தர இறைவனை வேண்டுகிறேன்.

இறைவன் அருள் புரிவானாக !

Jai Sai Ram

Anonymous said...

படிக்கும்போது என்னை அறியாமல் கண் கலங்கினேன். உங்கள் வலியை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த வலியை தாங்கும் சக்தியை உங்களுக்கு இறைவன் நிச்சயம் அளிப்பான்.

Anonymous said...

We all going to miss Anu Amma so much. I feel so sad. Take care Sir.

Ravi

cheena (சீனா) said...

அன்பு நண்பரே

ஈடுகட்ட முடியாத இழப்பினால் வருந்தும் உங்களுக்கு ஆறுதல் அளிக்க - அமைதியைத் தர ஆண்டவனை வேண்டுகிறேன்.

சில காரணங்களினால் வர இயலவில்லை. சில தினங்கள் கழித்து வருகிறேன் - பேசுகிறேன்.

கோவில்களுக்குச் செல்லப்போவதாக அறிந்தேன். மன அமைதி கிட்டும். அனுராதாவின் மன வலிமையை விட - தாங்கள் அவருக்குப் பக்க பலமாக இருந்தது பாராட்டத் தக்கது.

நண்பரே ! மனம் தளர வேண்டாம்.
இக் கொடிய நோயினைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் திட்டத்தினை அனுராதாவின் விருப்பப்படி நிறைவேற்ற எல்லா முயற்சிகளும் எடுக்க வேண்டுகிறேன்.

ஆண்டவன் அமைதியைத் தர மீண்டும் வேண்டுகிறேன்

RAMYA said...

அன்பு அப்பா,

நடந்து முடிந்த கொடுமையான பேரிழப்பால் மிகவும் பதித்து இர்ருக்கிறிர்கள். கடவுள் இருந்தும், நம்மை சோதித்து விட்டார். "ஆண்டாண்டு அழுதாலும் மாண்டார் நம்மை நினைபதில்லை" என்ற புது மொழியுடன் உங்கள் துக்கத்திருக்கு மருந்தாக சில நாட்கள் இடம் மற்றம் செய்யவும். இது என் மிக தாழ்மையான வேண்டுகோள். அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். உங்களுக்கு மிகுந்த உடல் ஆரோக்கியமும் மன தைரியமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அன்பு ரம்யா !!

லக்கிலுக் said...

:-(

Anonymous said...

Dear Sir

We are very far from your place & could not come & console you directly. Pls accept out heartfelt condolence. Again my humble request to your sir, if you wish can you pls put anu amma's photo so that atleast thru photo we can see her.

Anonymous said...

Anu amma will be always with you and you both are wonderful persons I ever know. My sincere prayers for your family.

Ushie

அனுராதா said...

எல்லாம் முடிந்தது.அனைவருக்கும் நன்றி.

.....அனுராதாவின் கணவன்.....